Published : 13 Jul 2015 10:13 AM
Last Updated : 13 Jul 2015 10:13 AM

முதல்வரின் உடல் நலம் குறித்த விமர்சனம் நாகரிகமற்றது: தா.பாண்டியன்

தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து விமர்சனம் செய்வது அரசியல் நாகரிகமற்றது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன்.

அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: நடுவர் மன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகமுள்ள தமிழகத்தில்தான் கல்வியின் தரம் குறைந்துள்ளது. எனவே, கல்வியின் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

சுகாதாரத் துறையில் காலி பணியிடங்களை நிரப்பாததால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றை உடனடியாக நிரப்ப வேணடும்.

நடப்பாண்டு பருவமழை குறைவாக இருக்குமென்று தகவல் வெளியாகியுள்ளதால், தற்போதே உணவுப் பொருட்களைப் பதுக்கு கின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சிறிசேனா கூட்ட ணியிலேயே ராஜபக்ச போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. அவர் வெற்றி பெற்றால் இலங்கையில் உள்ள தமிழர் களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும்.

தமிழக முதல்வரின் உடல் நலன் குறித்து அறிக்கை வெளி யிட வேண்டுமென அரசியல் கட்சியினர் வலியுறுத்துவது நாகரி கமற்ற செயலாகும். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமெனப் போராடும் பாஜக- வினர், நாடு முழுவதும் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத் தக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x