Published : 29 May 2014 10:31 AM
Last Updated : 29 May 2014 10:31 AM

தமிழகத்திலிருந்து அதிக அமைச்சர்கள் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படாது: இல.கணேசன் பேட்டி

தமிழகத்திலிருந்து அதிக அமைச்சர்கள் இல்லாதது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் செவ்வாய்க்கிழமை கூறினார்.

நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவில் கலந்துகொள் வதற்காக டெல்லி சென்றிருந்த பாஜக மூத்த தலைவர் இல.கணே சன், செவ்வாய்க் கிழமை இரவு சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இதை கணக் கில் கொண்டு விகிதாச்சார அடிப் படையில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இது எந்த வகையிலும் தமிழகத்தை பாதிக்காது.

இதனால் தமிழகத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது. பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அதனை பார்த் துக்கொள்வார். வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற் றுள்ள சுஷ்மா சுவராஜ், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக அந்த நாட்டுக்கே சென்று வந்தவர். தமிழக மீனவர்களின் நலனிலும் அவருக்கு அதிக அக்கறையுண்டு. எனவே அவரால் இலங்கையுடனான பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணமுடியும்.

நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காதது மத்திய மாநில உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது. விழாக்களில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x