Published : 31 Jul 2015 08:28 AM
Last Updated : 31 Jul 2015 08:28 AM

பிரதமருக்கு வணக்கம் கூறிய ராகுல்: அன்புமணியுடன் பேசிய விஜயகாந்த்

அப்துல் கலாமின் உடல் ராமேசு வரத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் தனித்தனி பந்தலில் அமர்ந்திருந்தனர். பிரதமர் அஞ்சலி செலுத்தியதும் அப்துல் கலாம் குடும்பத்தினர் அமர்ந்திருந்த பந்தலுக்குச் சென்றார். அப்போது ராகுல் காந்தி அஞ்சலி செலுத்துவோர் வரிசையில் காத்திருந்தார். அவர் பிரதமர் அமர்ந்திருந்த பந்தல் அருகே வந்தபோது, பிரதமர் எழுந்து தான் அமரவேண்டிய பந்தலுக்குச் சென்றார். எதிரே வந்த பிரதமரைப் பார்த்த ராகுல் காந்தி அவருக்கு கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய ராகுல் காந்தி, பிரதமரின் பந்தல் பக்கம் திரும்பாமலேயே தனது இருக்கையில் அமர்ந்தார். விஜயகாந்த்துடன் ராகுல் காந்தி சிறிது நேரம் பேசினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், திருமாவளவன் ஆகியோரும் ராகுல் காந்தியுடன் பேசினர். பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் வெகுநேரம் ராகுல் காந்தியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி முன்னரே வந்து பந்தலில் அமர்ந்திருந்தார். அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் அச்சு தானந்தன் பந்தலுக்கு வந்தபோது, உம்மன்சாண்டி எழுந்து சென்று அவரை வரவேற்றார்.

அன்புமணி ராமதாஸ் அமர்ந் திருந்த இருக்கையின் அருகே விஜயகாந்த் 30 நிமிடங்களுக்கும் மேல் அமர்ந்திருந்தார். இரு வரும் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தனர்.

நல்லடக்கம் நடைபெற்ற திட லுக்கு பிரதமர் 11.15 மணிக்கு வந்தார். வெள்ளை பேன்ட், சட்டையுடன் கருப்பு குர்தா அணிந்திருந்தார். நல்லடக்கம் முடிந்ததும் 12.15 மணிக்கு பிரதமர் புறப்பட்டார். அஞ்சலி செலுத்த 5 நிமிடம், அப்துல் கலாம் உறவினர்களிடம் பேச 5 நிமிடம் பிரதமர் செலவிட் டார். மற்றவர்கள் அஞ்சலி செலுத்தியதையும், இஸ்லாமிய முறைப்படி நடந்த மத சடங்குகளையும் 50 நிமிடங்கள் வரை பிரதமர் உன்னிப்பாக கவனித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x