Published : 01 Jul 2015 07:39 AM
Last Updated : 01 Jul 2015 07:39 AM

3 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மூன்று மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம், சிவகங்கை, சேலம் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.

நகர்ப்புற நில உச்சவரம்பு, நகர்ப்புற நிலவரி ஆணையராக இருந்த பி.அண்ணாமலை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை செயலாள ராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த பி.சிவசங்கரன், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் நசிமுதீன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளராகவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளராக (பொறுப்பு) இருந்த குமார் ஜெயந்த், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளராகவும் சிட்கோ மேலாண் இயக்குநராக இருந்த ஜக்மோகன் சிங் ராஜூ, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக இருந்த ஷிவ் தாஸ் மீனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளராகவும், தமிழ்நாடு சாலைப் பணிகள் திட்ட இயக்குநர் அனில் மேஷ்ராம், தமிழ்நாடு திட்டக் கமிஷன் உறுப்பினர் செயலராகவும், மத்திய அரசுப் பணியில் இருந்த ஆர்.லால்வீணா, சமூகப் பாதுகாப்பு இயக்குநராகவும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எஸ்.மதுமதி, தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலரான ஷம்பு கலோலிகர், தமிழ்நாடு சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநராகவும் வணிக வரித்துறை இணை ஆணையராக உள்ள எஸ். மலர்விழி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், முதல்வர் அலுவலக துணைச் செயலாளர் எஸ்.ஏ.ராமன், நில நிர்வாகத்துறை இணை ஆணையராகவும் மத்திய அரசுப் பணியில் இருந்த எஸ்.சுவர்ணா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் கழக தலைமை செயல் அதிகாரி கா.பாலச்சந்திரன், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை மேலாண் இயக்குநராகவும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வி.சம்பத், சேலம் மாவட்ட ஆட்சியராகவும், சென்னை மாநகராட்சி மண்டல இணை இயக்குநர் எம்.லட்சுமி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x