Published : 20 Jul 2015 07:52 AM
Last Updated : 20 Jul 2015 07:52 AM

கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும்: சென்னையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் சென்னையில் நேற்று 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்களின் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடபழனி முருகன் கோயில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநகர செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் தலைமை வகித்தார். திருவொற்றியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநகரப் பொதுச் செயலாளர் ஏ.டி. இளங்கோவன் தலைமை வகித்தார். புரசைவாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்ன ணியின் மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலம் தலைமை வகித்தார். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பாளர் க.பக்தவத்சலம் கூறும்போது, “கோயில்கள் வியாபார ஸ்தலமாகி வருகின்றன. கோயில்களுக்கு எவ்வளவோ பணம் பாக்கி வர வேண்டியுள்ளது. ஆனால் அதை யெல்லாம் விட்டுவிட்டு தரிசனத் துக்காக வரும் பொதுமக்களிடம் பணம் கேட்பது முறையல்ல. ஏழைக்கு ஒரு தரிசனம், பணக்காரருக்கு ஒரு தரிசனம் என்கிற நிலை பொருளாதார தீண்டாமையையே காட்டுகிறது. அத்தகைய நிலை தொடரக் கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x