Last Updated : 08 Jul, 2015 07:51 AM

 

Published : 08 Jul 2015 07:51 AM
Last Updated : 08 Jul 2015 07:51 AM

செவுள்வலை விசைப் படகுகளை வாங்க தமிழக அரசு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு: 180 மீனவர்களுக்கு 50 சதவீத மானியம்

மீனவர்களுக்கு செவுள்வலை விசைப் படகுகளை வாங்க தமிழக அரசு ரூ.30 கோடி ஒதுக்கி யுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக 180 மீனவர்களுக்கு விசைப்படகை வாங்க 50 சதவீதம் மானியம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

மீன்பிடித் தொழிலில் சுமார் 7 லட்சம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்பிடித் தொழிலின் பங்கு 0.07 சதவீதமாக உள்ளது. மேலும், மீன்கள் ஏற்றுமதி மூலம் கணிசமான அளவுக்கு அந்நிய செலாவணியும் கிடைத்து வருகிறது.

மீனவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மீன வர்கள் புதிய படகுகளை கட்டு வதற்காக அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக அரசு முதற் கட்டமாக ரூ.30 கோடி ஒதுக்கி யுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடலில் மீன்பிடிக்க சுருக்கு வலை, இரட்டை மடி வலை ஆகியவை தடை செய்யப் பட்டுள்ளன. இதையடுத்து, செவுள்வலை மூலம் மீன்பிடிக்க மீனவர்கள் ஊக்கப்படுத்தப்படு கின்றனர். இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகி றது. தமிழகத்தில் 5,600 பதிவு செய் யப்பட்ட படகுகளும், 400 பதிவு செய்யப்படாத படகுகளும் உள்ளன.

இந்நிலையில், செவுள்வலை படகுகளை வாங்க மீனவர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு முதற் கட்டமாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கி யுள்ளது. இதன்படி, செவுள்வலை விசைப் படகைக் கட்ட தோராய மாக ரூ.60 லட்சம் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 30 லட்சம் ரூபாய் மீனவர் களுக்கு மானியம் வழங்கப்படும்.

சென்னை, கடலூர், நாகப்பட்டி னம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செவுள்வலை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். செவுள்வலை விசைப் படகுகளை கட்டுவதற்கான மானியம் பெறுவதற்காக மீனவர்களிடமிருந்து 271 விண் ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 180 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள் ளப்பட்டுள்ளன. விரைவில் இவர் களுக்கு படகு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட உள்ளது. அத்துடன், இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக அடுத்த மூன்றாண்டுகளுக்கு ரூ.975 கோடி நிதியை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு கோரியுள்ளது.

மேலும், மீன்வளம் அதிகளவில் பயன்படுத்தப்படாத ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிப்பை மாற்று வதன் மூலம் அண்மைக் கடல் பகுதியில் மீன்வள ஆதாரங் களை அதிகரிக்கவும், இப்பகுதி யில் மீன்பிடிப்பதில் மீனவர்களுக் கிடையே ஏற்படும் பிரச்சினை களைத் தீர்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்கிறது .இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளை தரம் உயர்த்தவும், புதிதாக படகு வாங்குவதற்கும் வேண்டி 25 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. இதன்படி, இதுவரை 150 படகுகளுக்கு மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x