Published : 26 Jul 2015 10:05 AM
Last Updated : 26 Jul 2015 10:05 AM

காங்கிரஸுக்கு பொற்காலம் தொடங்கிவிட்டது: இளங்கோவன் பெருமிதம்

தமிழகத்தில் காங்கிரஸுக்கான பொற்காலம் தொடங்கிவிட்டது என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காமராஜரின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 23-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார். கடும் மழையை யும் பொருட்படுத்தாமல் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் அவரது உரையை கேட்டது அனை வரையும் வியப்பில் ஆழ்த் தியுள்ளது. திருச்சியில் கூடியது கூட்டப்பட்ட கூட்டமல்ல. கொள்கைக் கூட்டம் என்பதை நிரூபிக்க கடும் மழை நமக்கு உதவியிருக்கிறது.

50 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத கட்சியில் இத்தகைய தொண்டர்கள் இருப்பதைப் பார்த்து ராகுல் காந்தி மகிழ்ச்சி யில் திளைத்தார். மழையில் முழுவது மாக நனைந்து கொண்டே அவர் ஆற்றிய உரை கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

தமிழகத்தில் காங்கிரஸின் அரசியல் பயணத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் ராகுல் காந்தியின் உரை அமைந்தது. இலவச பிரியாணி, மதுபானங் களை வழங்கி கூட்டம் சேர்க்கும் கலாச்சாரம் காங்கிரஸில் இல்லை. ஆயிரக்கணக்கில் எதிர்பார்த்தோம். லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரண்டது எல்லையில்லா மகிழ்ச்சியை தந்துள்ளது.

தங்களது சொந்த முயற் சியால் பல்வேறு சிரமங்களை தாங்கிக்கொண்டு காங்கிரஸின் வலிமையை பறைசாற்றிய தொண்டர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. தொண்டர்கள் வழி நடத்துகிற இயக்கமாக காங்கிரஸ் இனி செயல்படும். அவர்களின் உழைப்பு வீண் போகாது. நமக்கான பொற்காலம் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் ஒரே காங்கிரஸ்தான் இருக்க முடியும் என்பதை திருச்சி பொதுக்கூட்டம் நிரூபித்துவிட்டது.

தொடக்கத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மிகச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த திருச்சி காவல் துறையினருக்கும், ஊடகத் துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x