Published : 21 Jul 2015 08:02 AM
Last Updated : 21 Jul 2015 08:02 AM

தானியங்கி புக்கிங் சேவையின்போது எண் பூஜ்ஜியத்தை அழுத்தினாலே சிலிண்டர் மானியம் ரத்தாகிவிடுமா? - ஐஓசி அதிகாரிகள் விளக்கம்

புதிய சிலிண்டர் பெறுவதற்கான தானியங்கி புக்கிங் சேவையில் எண் பூஜ்ஜியத்தை அழுத்துவதாலேயே சிலிண்டர் மானியம் ரத்தாகிவிடாது என்று ஐஓசி அதிகாரிகள் கூறி யுள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் காலியானதும், புதிய சிலிண்டர் பதிவு செய்ய தானியங்கி புக்கிங் சேவை தற்போது அமலில் உள் ளது. சமீபகாலமாக இவ்வாறு புதிய சிலிண்டர் பதிவு செய்யும் போது, ‘சிலிண்டர் மானியத்தை விட்டுக்கொடுக்க எண் பூஜ்ஜி யத்தை அழுத்தவும்’ என குரல் வழி யாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இது நுகர்வோர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதியவர்கள் முன்பதிவு செய்யும் போது, தவறுதலாக ‘0’ என்ற எண்ணை அழுத்த வாய்ப்பு உள் ளது. குழந்தைகள் தங்களை அறியாமல் தானியங்கி புக்கிங் சேவை எண்ணை அழுத்திவிட்டு, ‘0’ எண்ணை அழுத்தவும் வாய்ப்பு உள்ளது. இப்படி செய் தால், சிலிண்டர் மானியத்தை இழக்கவேண்டி வருமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) உயர் அதிகாரிகள் கூறிய தாவது: சிலிண்டர் காலியாகிவிட் டால் நுகர்வோர் தானியங்கி புக்கிங் சேவை மூலம் பதிவு செய்துவருகின்றனர். இந்த பதிவை உறுதிசெய்ய எண் ஒன்றை அழுத்துகின்றனர். இதையடுத்து, அவர்களது பெயரில் புதிய சிலிண்டர் பதிவு செய்யப்படுகிறது. தற்போது மத்திய பெட்ரோலிய துறையின் ஆணைப்படி, இந்த புக்கிங் சேவையில் பதிவுக்குரல் வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. இதை நுகர்வோர் தொடர்பு கொள்ளும் போது, சிலிண்டர் மானியத்தை விட்டுக்கொடுக்கும்படி, பதிவு செய்யப்பட்ட குரல் வழியாக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. மானியத்தை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பவர்கள் தங்களது விருப்பத்தை எளிதில் தெரிவிக்க ஏதுவாகவும், அத்தகைய நுகர் வோர் யார் என்பதை எளிதில் கண்டறிவதற்காகவுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி மூலமாகவே, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை விட்டுக்கொடுக்க விரும்புபவர்கள் முதலில் தொலை பேசியில் உள்ள ‘0’ எண்ணை அழுத்த வேண்டும் அதன் பிறகு எண் ‘7’-யை அழுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், சம்பந்தப் பட்ட நுகர்வோர் மானியத்தை விட்டுக்கொடுக்க விரும்புகிறார் என்ற தகவல் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும்.

சிலிண்டர் மானியத்தை நிறுத்துவதற்கான நடை முறைகள் உடனே தொடங்கப் படாது. நுகர்வோரிடம் எரிவாயு ஏஜென்சி ஊழியர்கள் இத்தகவலை உறுதி செய்த பிறகே, சிலிண் டர் மானியத்தை நிறுத்துவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப் படும்.

எனவே, தானியங்கி புக்கிங் சேவையில் முன்பதிவு செய்யும் போது, பூஜ்ஜியம் எண்ணை அழுத் தினாலே, சிலிண்டர் மானியம் நின்றுவிடும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை.

ஒருவேளை, மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள், மறுபடி யும் மானிய விலையில் சிலிண் டர் பெற விரும்பினாலும், அதற் கான நடைமுறைகளும் மேற்கொள் ளப்படும். இவ்வாறு ஐஓசி அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x