Published : 19 Jul 2015 10:31 AM
Last Updated : 19 Jul 2015 10:31 AM

மாமல்லபுரத்தில் ரூ.1.22 கோடியில் கட்டமைப்பு பணிகள் தொடக்கம்

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை சுற்றுலாத் துறை நேரடியாக மேற்கொண்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியில் சுற்றுலாத் துறை நேரடியாக ஈடுபட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன், ரூ.1.22 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நகரை அழகுபடுத்தும் விதமாக முக்கிய சாலைகளில் ரூ.20 லட்சம் செலவில் 35 நவீன அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரூ.90 ஆயிரம் மதிப்பில் 10 குப்பை தொட்டிகள், ரூ.2.5 லட்சம் செலவில் மரத்தினால் ஆன 10 அலங்கார இருக்கைகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

ரூ.20 லட்சம் செலவில், சுற்றுலா தலங்களின் விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகள், கிழக்கு கடற்கரை சாலையில் 3 இடங்களிலும், மாமல்லபுரத்தின் முக்கிய பகுதிகளில் 4 இடங்களிலும் அமைக்கப்பட உள்ளன. பூஞ்சேரி, வெண்புருஷம், பொதுப்பணித்துறை சாலை ஆகிய இடங்களில் ரூ.79.4 லட்சம் மதிப்பில் 6 பொது கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x