Published : 05 Jul 2015 11:23 AM
Last Updated : 05 Jul 2015 11:23 AM

வைகோவுடன் ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இயக்கம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக புது இயக்கம் தொடங்க அழைப்பு விடுத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் நேற்று காலை சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்துக்கு வந்தனர். அங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு தொடர்பாக நிருபர் களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறிய தாவது:

ஓராண்டு பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், ஐபிஎல் மூலம் 1,800 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் லலித் மோடிக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்துள்ளார். ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவும் லலித் மோடிக்கு உதவியுள்ளார்.

இது தொடர்பான ஆதாரங்கள் வெளியான பின்பும் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மவுனமாக இருக் கிறார் என்று குற்றம்சாட்டிய மோடி, தற்போது தானும் மவுனமாகவே இருக்கிறார். காங்கிரஸுக்கும் பாஜக வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

நிலம் கையகப்படுத்துதல் போன்ற விவசாயிகளுக்கு எதிரான சட்டங் களை கொண்டுவர பாஜக முயற்சிக் கிறது. பாஜக ஆட்சியில் வகுப்புவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்திலும் கடந்த 4 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துள்ளது. இயற்கை வளம் கொள்ளை போகிறது. சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளது.

இத்தகைய மக்கள் விரோத கொள் கைகளுக்கு எதிராக ஒரு இயக்கத்தை தொடங்குகிற விதத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்துப் பேசியுள்ளோம். தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடனும் பேசுவோம். வேறு கட்சிகளை அழைப்பது தொடர்பாக பரிசீலித்து முடிவெடுப்போம். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ‘‘கார்ப்பரேட் களுக்கு ஆதரவாகவும், இந்துத்வ பின்னணியிலும் மத்திய அரசு இயங்கு கிறது. தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊழல் தலை விரித்து ஆடுகிறது. முதல்வரை யாரும் அணுக முடியவில்லை. இவற்றை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கவுள்ளதை வரவேற்கிறோம். எங்களது முடிவை மதிமுக உயர்நிலைக் குழுவில் ஆலோசித்து அதன் பிறகு வெளியிடுவோம்’’ என்றார். மதிமுக உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் வரும் 8-ம் தேதி நடக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x