Published : 04 Jul 2015 01:41 PM
Last Updated : 04 Jul 2015 01:41 PM

அதானி குழுமத்திடம் இருந்து 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல்: முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

கமுதியில் அதானி நிறுவனம் அமைக்க உள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களில் இருந்து 648 மெகாவாட் சூரிய மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி குழும நிறுவனம் ரூ.4,536 கோடியில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கிறது. இந்த நிலையங்களில் இருந்து 648 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு கொள்முதல் செய்வ தற்கான ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் எம்.சாய்குமார் அனைவரையும் வரவேற்றார். அதானி குழும மேலாண் இயக்குநர் ராஜேஷ் அதானி, திட்டம் குறித்து விளக்கினார். முதல்வர் ஜெயலலிதா பேசும் போது, ‘‘இந்த நிகழ்வில் பங்கேற் பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டம் வெற்றியடைவதுடன், தமிழகத்துடனான உங்கள் (அதானி குழுமம்) கூட்டு முயற்சி தொடரும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், எரிசக்தித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, அதானி குழும முதன்மைச் செயல் அலுவலர் வினீத் எஸ்.ஜெயந்த், முதுநிலை துணைத் தலைவர் கே.எஸ். நாகேந் திரா, தென்னிந்திய துணைத் தலைவர் ஏ.லட்சுமி நாராயணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ.7,588 கோடி முதலீடு

அதானி குழும ஒப்பந்தத்தையும் சேர்த்து இதுவரை 1,084 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் சூரிய சக்தி உற்பத்தி நிறுவனங்களின் முதலீடு ரூ.7,588 கோடியாக உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மற்றும் விருது நகரில் உற்பத்தியாகும் சூரிய மின்சாரத்தை எடுத்துச் செல்ல கமுதியில் ரூ.435.50 கோடியில் 400 கிலோ வோல்ட் துணைமின் நிலையம் அமைக்கப்படுகிறது. அதேபோல விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் முத்துராமலிங்க புரத்தில் ரூ.47.51 கோடியில் 230 கிலோ வோல்ட் புதிய துணை மின் நிலையத்தை தமிழக மின்தொடர மைப்பு கழகம் அமைத்து வருகிறது.

மேலும் 107 நிறுவனங்கள் 2,722.5 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் பதிவு செய்துள்ளன. அதில் 1,132 மெகாவாட் திறன் கொண்ட 53 சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களின் திட்டங்களுக்கான மின்னோட்ட பகுப்பாய்வு முடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x