Published : 14 Jul 2015 09:08 AM
Last Updated : 14 Jul 2015 09:08 AM

ரேஷன் கடைகளில் ஆதார் எண் கேட்கப்படவில்லை: உணவுத்துறை அமைச்சர் விளக்கம்

ரேஷன் கடைகளில் ஆதார் எண் அல்லது தேசிய மக்கள் தொகை பதிவு எண் கேட்கப்படவில்லை; கணினி மயமாக்குவதற்காக உறுப் பினர் எண்ணிக்கை, எரிவாயு இணைப்பு மற்றும் கைபேசி எண்கள் மட்டுமே பெறப்படுகிறது என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று, உணவுத்துறை அமைச்சர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:

ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட்டு, உரிய தரம் மற்றும் எடையில் மாதத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் பொருட்களை சீரான முறையில் விநியோகிக்க வேண்டும். தமிழகத்தில் 4 மாதத்துக்கு போதுமான புழுங்கல் மற்றும் பச்சரிசி கையிருப்பில் உள்ளது.

பொது விநியோகத் திட்டத்தை கணினிமயமாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக சென்னை மாநகரில் உள்ள சில ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் உறுப் பினர் எண்ணிக்கை, எரிவாயு இணைப்பு விவரம், கைபேசி எண்கள் போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ஆதார் அல்லது தேசிய மக்கள் தொகை பதிவேடு எண் ஆகிய விவரங்கள் தற்போது கோரப்பட வில்லை. சேவைத்தரம் உயர்த்தி வழங்கும் பொருட்டு மேற்கொள் ளப்படும் அரசின் இந்த நட வடிக்கைகளுக்கு குடும்ப அட்டை தாரர்கள் போதிய ஒத்துழைப்பு தருவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x