Published : 09 Jul 2015 08:50 AM
Last Updated : 09 Jul 2015 08:50 AM

மாமூல் தராவிட்டால் பொய் வழக்கு: காவல், வருவாய்த்துறை அதிகாரிகள் மீது மணல் லாரி உரிமையாளர்கள் புகார்

அனுமதியுடன் கொண்டு செல்லப்படும் மணல் லாரிகள், மாமூல் தராவிட்டால் சில அதிகாரிகள் பொய் வழக்கு பதிவு செய்வதாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் புகார் கூறியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ராஜேஷிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சங்கத் தலைவர் செல்ல.ராஜாமணி கூறியதாவது:

சங்கங்களில் பதிவு செய்யாத லாரிகளில் அதிக பாரம் மணல் ஏற்றப்பட்டு நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக கர்நாடகாவுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு மணல் கடத்தும் லாரிகள் மீது அந்தந்த மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பது இல்லை.

ஆனால், முறையாக அனுமதிச் சீட்டு பெற்று ஓசூரில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு சரியான அளவு பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை, மாவட்ட காவல்துறையினர் சுங்கச் சாவடி அருகே தடுத்து நிறுத்தி ஓட்டுநர்களிடம், மணல் வாங்கும் பயனாளிகள் யார், அவர்களுடைய முகவரி, தொலைபேசி எண்கள், கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் போன்றவற்றை காட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இது தொடர்பான விவரங்களைத் தெரிவித்துவிட்டு காவல்துறை சார்ந்தவர்களையும், கிராம நிர்வாக அலுவலர்களையும் உடன் அழைத் துச் சென்று மணல் வழங்கி வருகிறோம். அவ்வாறு உடன் வருபவர்களுக்கு ஒரு லோடுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண்டியுள்ளது. பணம் தர மறுக்கும் லாரிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும், ஓட்டுநர்களை சிறையில் அடைத்தும் வருகிறார்கள். இதேபோல் வருவாய்த்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர் களும் செய்கின்றனர்.

இதனால் மணல் லாரி ஓட்டுநர்கள் அச்சமடைந்து பணிக்கு வர மறுக்கிறார்கள். காவல், வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் லாரி உரிமை யாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். பொய் வழக்கு பதிவு செய்வதை காவல்துறையினர் நிறுத்தாவிட்டால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் வோம். ஓசூர் மணல் லாரி உரிமையாளர்கள் கடந்த இரு தினங்களான நடத்தி வரும் வேலை நிறுத்தத்துக்கு, அனைத்து மாவட்ட மணல் லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும், வருகிற 13-ம் தேதி கிருஷ்ணகிரியில் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x