Published : 06 Jul 2015 09:46 AM
Last Updated : 06 Jul 2015 09:46 AM

கூழாங்கற்களின் மீது நடைப்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்: அக்குபஞ்சர் டாக்டர் தகவல்

கூழாங்கற்களின் மீது நடைப்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று அக்குபஞ்சர் டாக்டர் தெரிவித்தார்.

ரெங்கா அக்குபஞ்சர் மற்றும் யோகா சமூகநலக்கல்வி அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு “இலவச அக்குபஞ்சர், அக்கு பிரஷர், ஃபுட்-ரிப்ளக்ஸாலஜி விழிப்புணர்வு நிகழ்ச்சி” சென்னை அண்ணாநகரில் (கிழக்கு) நேற்று நடந்தது.

அறக்கட்டளை தலைவரும், அறங்காவலருமான டாக்டர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ச.தமிழ்வாணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட, தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் டாக்டர் எம்.ராஜாராம் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். அக்குபஞ்சர் மூலம் மயக்கம், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மன அழுத்தம், விபத்தில் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை கட்டுப்படுத்துவது போன்றவைகள் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நீதிபதி ச.தமிழ்வாணன் பேசும்போது, “மருந்து இல்லாத, மக்களுக்கு கேடு விளைவிக்காத இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளை பயன்படுத்தலாம். அக்குபஞ்சர் சிகிச்சை முறையாக படித்தவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் உதவுகிறது. இதுபோன்ற மருத்துவ முறைகள் பொதுமக்களுக்கு தேவையானது” என்றார்.

டாக்டர் எஸ்.ரவிச்சந்திரன் கூறும்போது, “முகத்தில் 52-க்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன. பயம், படபடப்பு, மன அழுத்தம் இருக்கும் போது தண்ணீரால் முகத்தை கழுவினால் எல்லாம் சரியாகிவிடும். உடல் சார்ந்த நோய்கள் வராமலும் தடுக்கலாம். உடல் உறுப்புகள் அனைத்துக்கும் கால் பாதங்களில் புள்ளிகள் இருக்கின்றன.

கூழாங்கற்களின் மீது தினமும் 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால் உடல் உறுப்புகள் தூண்டப்படும். உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேற்றப்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். சென்னை பூங்காக்களில் கூழாங்கற்களின் மீது நடைப்பயிற்சி செய்வதற்காக பாதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

முகத்தில் 52-க்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன. பயம், படபடப்பு, மன அழுத்தம் இருக்கும்போது தண்ணீரால் முகத்தை கழுவினால் எல்லாம் சரியாகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x