Published : 21 May 2014 11:02 AM
Last Updated : 21 May 2014 11:02 AM
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ வெங்கட்ராமன், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.
மக்களவைத் தேர்தலுடன் நடத்த ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.என்.பி.வெங்கட்ராமன், 18,908 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சட்டப்பேரவைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஆலந்தூர் எம்எல்ஏவாக வெங்கட்ராமன் பதவியேற்றுக் கொண்டார்.
இதுதொடர்பாக சட்டப்பேர வைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமா லுதீன் வெளியிட்ட அறிக்கை யில், ‘ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட வி.என்.பி.வெங்கட்ராமன், பேரவைத் தலைவர் தனபாலின் அறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.13 மணியளவில் பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தல் வெற்றியின் மூலம், சட்டப்பேரவையில் அதிமுக பலம் 152 ஆக (சமக, கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் உள்பட) உயர்ந்திருக்கிறது. தேமுதிக பலம் 29-ல் இருந்து 28 ஆக குறைந்துள்ளது. இவர்களில் 7 பேர் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆவர்.
திமுக-23, சிபிஎம்-10, சிபிஐ-8, காங்கிரஸ்-5, பாமக-3, புதிய தமிழகம்-2, மமக-2 மற்றும் பார்வர்ட் பிளாக்-1.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT