Published : 17 Jul 2015 08:46 AM
Last Updated : 17 Jul 2015 08:46 AM

தமிழக பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடி முன்வர வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டார்.

தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியை மலரச் செய்ய வேண்டு மென்ற லட்சியத்தோடு தொடங்கப் பட்டது தமாகா.

காமராஜர் ஆட்சியில் கல்வி, வேளாண்மை, தொழில்புரட்சி அமைதியாக நடைபெற்றது. நாட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது. அனைத்து மாணவர்களுக்கும் கல்வியும், மதிய உணவும் கிடைப்பதை உறுதி செய்வதே காமராஜருக்கு நாம் செலுத்தும் முதல் மரியாதை. விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் ஆதரிக்கக்கூடாது. அப்படி ஆதரித் தால் போராட்டம் நடத்துவோம்.

உலகம் முழுவதும் சுற்றிவரும் பிரதமர் மோடி, தமிழகத்துக்காக சில மணி நேரத்தை ஒதுக்க வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். தென்னக நதிகளை இணைக்கும் சிறப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

வறட்சியால் வாடும் விவசாயி களுக்கு நிவாரணம் வழங் கவும் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். தலித், பழங்குடியின மக்களுக்கு வழங்கும் நிதியை மத்திய, மாநில அரசுகள் அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் தமாகா ஆட்சியை ஏற்படுத்தும் வகையில் கட்சியினர் செயல்பட வேண்டும். இதற்காக ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொள்கிறேன்” என்றார்.கட்சியின் துணைத் தலைவர்கள் ஞான தேசிகன், எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன், பீட்டர் அல்ஃபோன்ஸ், ஞானசேகரன், தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, தமாகா எழுச்சிப் பாடல் சிடி-யை வாசன் வெளியிட்டு, பேச்சுப் போட்டியில் வென்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x