Published : 25 Jul 2015 08:24 AM
Last Updated : 25 Jul 2015 08:24 AM

காவிரி குறுக்கே புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும்: ராகுல் காந்தியிடம் தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாட காவில் புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினர்.

தமிழக விவசாயிகளின் பிரச் சினைகள் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் மாலை திருச்சியில் கலந்துரையாடினார். விமான நிலையம் அருகே ஜே.கே. நகரிலுள்ள பண்ணை வீட்டில் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி யில் ராகுலிடம் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:

கே.வி.இளங்கீரன், வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான நடுவர் உத்தரவை செயல்படுத்த காங்கிரஸ் தமிழகத் துக்கு சாதகமாக செயல்பட வேண் டும். நீர் பங்கீடு தொடர்பாக அண்டை மாநிலங்களுக்கு இடையே ஏற் படும் பிரச்சினைகளால் இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

ஜே.பி சுப்பிரமணி, நீலகிரி குறு, சிறு தேயிலை விவசாயிகள் சங்கத் தலைவர்:

தற்போதுள்ள நிலையில் பச்சைத் தேயிலையின் விலை கிலோ 1-க்கு ரூ.30 விற்கப் பட வேண்டும். ஆனால் ரூ.5-க்கு மட்டுமே விலை போகிறது. இதனால் தேயிலை உற்பத்தியில் உள்ள 65 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச் சினைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

கே.எம்.ராமகவுண்டர், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர்:

பாஜக அரசு கொண்டுவரும் நில கையகப் படுத்தும் சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். ஏழ்மையை ஒழித்து, விவசாயிகளை காப்பாற்ற நாட்டிலுள்ள நதிகளை இணைக்க காங்கிரஸ் வலியுறுத்த வேண்டும்.

பி.அய்யாக்கண்ணு, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர்:

காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி ஏற்படுத்த குரல் கொடுக்க வேண்டும் என ராகுலிடம் தெரிவித்துள்ளோம்.

தீட்சிதர் பாலசுப்பிரமணியன், காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர்:

காவிரி யின் குறுக்கே கர்நாடகா புதிய அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

செல்லமுத்து, உழவர் உழைப் பாளர் கட்சித் தலைவர்:

நாட்டில் சுமார் 3 லட்சம் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமான, விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய முயற்சிக்க வேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

இதேபோல ஏராளமான விவசாயிகள் தங்கள் கருத்துகளை ராகுலிடம் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x