Last Updated : 25 Jul, 2015 08:52 AM

 

Published : 25 Jul 2015 08:52 AM
Last Updated : 25 Jul 2015 08:52 AM

என்எல்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தீவிரம்: மழையால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

ஊதியமாற்று ஒப்பந்தத்தை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள என்எல்சி தொழி லாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 6-வது நாளாக நீடிக்கிறது.

01-01-2012 முதல் 31-12-2017 வரையிலான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதையடுத்து நிர்வாகம் 2014-ம் ஆண்டு இடைக்கால நிவாரணம் வழங்கியது.

இருப்பினும் புதிய ஒப்பந் தத்தை ஏற்படுத்தி, புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதிய உயர்வையும், இதர சலுகைகளையும் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய நிலையில் மீண்டும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமுக முடிவு எட்டப்படாததால், ஜூலை 20-ம் தேதி இரவுப் பணி முதல் சில தொழிற்சங்கங்கள் காலைவரையற்ற வேலைநிறுத் ததில் ஈடுபட்டுள்ளன.

வேலைநிறுத்தத்தை முடி வுக்குக் கொண்டுவர மத்திய தொழிலாளர் நலவாரியம் சென்னையில் ஜூலை 22-ம் தேதி நிர்வாகத்துக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் நேற்று நெய்வேலியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மேலும் ஜூலை 27-ம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் நிறுவனத்தின் மின்னுற்பத்தி நிலவரம் குறித்து கேட்டபோது, தற்போது மொத்தம் 2145 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நெய் வேலியில் உள்ள என்எல்சியின் மொத்த மின்னுற்பத்தித் திறன் 2990 மெகாவாட் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கச் செயலாளர் ஆர்.உதயக்குமாரிடம் கேட்ட போது, ‘நிர்வாகத்தின் பிடிவாதப் போக்குத் தொடர்கிறது. 100 சதவீத தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. மேலும் மாலை நேரங்களில் மழை தொடர்வ தால் சுரங்கத்தில் பராமரிப்புப் பணிகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே ஓரிரு தினங்களில் மின்னுற்பத்தி பாதிக் கும் அபாயம் உள்ளது. நிர்வாகம் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனிடையே தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே விரைவில் சுமுக முடிவு ஏற்படும்’ என்றார்.

என்எல்சி மனிதவளத் துறை செயல் இயக்குநர் என்.முத்துவிடம் கேட்டபோது, 80 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்களும், பொறியாளர்களும் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மின் தொகுப்பின் தேவைக்கேற்ப தடங்கலின்றி மின்சாரம் தொடர்ந்து வழங்கி வருகிறோம். எனவே மின் உற்பத்தி பாதிக்காது. மத்திய அரசு தலையிட்டிருப்பதால் ஓரிரு தினங்களில் சுமுக முடிவு ஏற்படும் என நம்புகிறோம்’ என்றார்.

இதனிடையே பேச்சுவார்த்தை விவரம் குறித்தும், நிர்வாகத்தின் நிலையை தொழிலாளர்களிடையே எடுத்துரைக்கும் வகையில் இன்று (ஜூலை 25) நெய்வேலி வட்டம் 17-ல் உள்ள அண்ணா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாக தொமுச செயலாளர் எஸ்.ராஜவன்னியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x