Published : 22 Jul 2015 07:43 AM
Last Updated : 22 Jul 2015 07:43 AM

இறந்த வாக்காளர்களின் பெயர்கள் கள ஆய்வுக்கு பிறகு நீக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்

தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டப் பணிகளின்போது பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான மனுக்களும் பெறப்பட்டன.

இதில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட 9.61 லட்சம் மனுக்களில் 9.25 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. பெயர் நீக்கத்துக்காக பெறப்பட்ட 1.62 லட்சம் மனுக்களில், 1.59 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன.

தொகுதி விட்டு தொகுதி இடமாற்றம் தொடர்பாக பெறப்பட்ட 3.86 லட்சம் மனுக்களில் 3.75 லட்சம் மனுக்களும், தொகுதிக்குள் இடமாற்றம் தொடர்பாக பெறப்பட்ட 1.41 லட்சம் மனுக்களில் 1.28 லட்சம் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த உத்தரவுகளை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

ஆதார் இணைப்பு பணிக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்றபோது முகவரி மாறியவர்கள், தொகுதி மாறியவர்கள், இறந்தவர்கள், வீடுகளில் இல்லாதவர்கள் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இதில், இறந்தவர்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட வாக் காளரின் உறவினர்கள் கூறினாலோ இறப்பு சான்றிதழை அளித்தாலோ மட்டுமே நீக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் இரு இடங்களில் ஒருவர் பெயர் இருப்பதை தவிர்க்க புதிய மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் விவரங்கள் ஒப்பிடப்பட்டு, கள ஆய்வுக்குப் பிறகு வேறு இடத்தில் இருந்து அவரது பெயர் நீக்கப்படுகிறது.

இறந்தவர்கள் மற்றும் இடம் மாறியவர்கள் தொடர்பான இறுதிப் பட்டியல் இதுவரை தயாராகவில்லை. பட்டியல் தயாரிப்பில் ஏற்படும் குளறுபடிகளுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களே பொறுப்பு என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல்- ஆதார் இணைப்பு பணியில் இதுவரை 2.79 கோடி வாக்காளர்கள் அதா வது 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர் களின் விவரங்கள் இணைக்கப் பட்டுள்ளன. இந்த இணைப்பு குறித்து குறுஞ்செய்தி, இ-மெயில் மூலம் வாக்காளர்களுக்கு விரைவில் தகவல் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம்தோறும் இப்பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து காணொலி காட்சி மூலம் வரும் 24-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசிக்கப்படும்.

இந்த ஆண்டும் அக்டோபர் மாத மத்தியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதற் குள் குழப்பங்கள் தீர்க்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x