Published : 26 May 2014 09:10 AM
Last Updated : 26 May 2014 09:10 AM

கண்ணீருடன் காத்திருக்கும் மீனவர் குடும்பங்கள்

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதால் மீனவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பங்கள் அவர்களின் வருகைக்காக கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து அப்பாவி மீனவர் கள் விடுதலைக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் கூறியது: கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலேயே இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 98 பேரும் தாயகம் திரும்பினர். தற்போது தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் தமிழக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்வதில்லை. இத னால் எல்லை தாண்டிய குற்றச் சாட்டின் பேரில் இலங்கை கடற்படை சமீபத்தில் யாரையும் கைது செய்யவில்லை.

இலங்கை வெளிக்கடை சிறை யில் 5, நீர்கொழும்பு சிறையில் 2, யாழ்ப்பாணம் சிறையில் 7 என 14 தமிழக மீனவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்திய குற்றச்சாட்டின்பேரில் நீதிமன்றக் காவலில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நீதிமன்றங்கள் விடுமுறை என்பதால் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்படும் தமிழக மீனவர் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவில்லை என்றார்.

கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்

2011 நவ. 28-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டி ருந்த ராமேசுவரம் மீனவர்களான அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லாங்நெட் ஆகிய 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்கள் மீது இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது. அவர்களை விடு விக்க இங்குள்ள மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். அப்பாவி மீனவர்களான அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த தமிழக அரசு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் உள்ள 5 மீனவர்களுக்காக தற்போது வழக்கை நடத்தி வருகிறது.

இதுகுறித்து மீனவர் பிரசாத் மனைவி ஸ்கெனிடா நமது செய்தியாளரிடம் கூறியது:

எங்க குடிசைகளைப் பார்த்தா போதைப் பொருள் கடத்துறவன் வீடு மாதிரியா இருக்கு. இரண்டரை வருஷம் ஆகிடுச்சு. வாய்தா மேல வாய்தா போடுறாங்க. என் மூத்த மகன் ஜெயஸ்க்கு இன்னைக்கு மூன்றரை வயது. அவனோட முதல் பிறந்த நாளைக் கொண்டாடிட்டு கடலுக்குப் போனவர் இதுவரை வீடு திரும்பல.

2-வது மகன் ரோசனுக்கு இன்று 2 வயது. தமிழக அரசு எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கு. இல் லைன்னா எப்பவோ குடும்பத் துடன் இறந்திருப்போம். இப்ப குழந்தைகள் வளர்ந்துட்டு வர் றாங்க. தான் ஒரு நிரபராதி மீனவர் என நிரூபித்துவிட்டு, எங்க வீட்டுக் காரங்களோட சேர்த்து 5 பேரும் விரைவில் வீட்டுக்கு வருவாங்க என்றார் நம்பிக்கையோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x