Published : 02 Jul 2015 12:23 PM
Last Updated : 02 Jul 2015 12:23 PM

மெட்ரோ ரயிலில் சக பயணியை ஸ்டாலின் அறைந்தது கண்டிக்கத்தக்கது: ஜெயலலிதா

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த திமுக பொருளாளர் ஸ்டாலின், சக பயணியை கன்னத்தில் அறைந்தது கண்டனத்துக்குரியது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று (புதன்கிழமை) மு.க.ஸ்டாலின் பயணித்தார். அந்த பயணித்தின்போது அவர் பயணி ஒருவரின் கன்னத்தில் அறைந்து ஆவேசமாக பேசுவதுபோல் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு ஊடகங்களிலும் வெளியானது.

இதனைக் குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, "அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், வெற்று விளம்பரத்திற்காகவும் 1.7.2015 அன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஸ்டாலின், அந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இந்த செய்தியும், காட்சியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

இது போன்று அநாகரிகமாக நடந்துகொள்வது சட்டமன்ற உறுப்பினருக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது இடங்களில் எல்லோருக்கும் சம அளவு உரிமை உள்ளது என்பதையும், யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்பதையும் உணர்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x