Published : 07 Jul 2015 07:41 AM
Last Updated : 07 Jul 2015 07:41 AM

3-வது முயற்சியில் ஐஏஎஸ் வெற்றி: ‘தன்னம்பிக்கை இருந்தால் கிராமப்புற மாணவர்களும் சாதிக்கலாம்’

தன்னம்பிக்கையும், விடாமுயற்சி யும் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள உடுமலையைச் சேர்ந்த த.பூபாலன் தெரிவித்தார்.

உடுமலை - ஆனைமலை செல்லும் வழியில் உள்ள கரட்டு மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.தண்டபாணி. இவர், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்; மனைவி சண்முகவள்ளி குடும்பத் தலைவி. இவர்களது மகன் த.பூபாலன்(27). இவர் தனது 3-வது முயற்சியில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றுள்ளார். ஏற்கெனவே 2 முறை ஐஆர்எஸ் தேர்ச்சி பெற்றிருந்த அவர், சென்னை வருமான வரித் துறையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வருகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது: 8-ம் வகுப்பு வரை ரெட்டியாரூரிலும், 10-ம் வகுப்பு வரை கரட்டுமடத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் படித்தேன். பின்னர், பி.இ. கணினி அறிவியல் படிப்பை முடித்தேன்.

பணிபுரிந்துகொண்டே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன்.

ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற தீராத ஆசையால், 3-வது முறை தேர்வு எழுதி ஐஏஎஸ்-ஆக தேர்வாகியுள்ளேன். தன்னம் பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் கிராமப்புற இளைஞர் களும் சாதிக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x