Published : 16 Jul 2015 10:32 AM
Last Updated : 16 Jul 2015 10:32 AM
மெட்ரோ ரயில் பணியில் இருந்து கேமின் நிறுவனத்தை வெளியேற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் வேலையில் இருக்கிறோமா? இல்லையா? என்ற குழப்பத்தில் 2,500 வடமாநில தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை மாநகரின் போக்கு வரத்து வசதிக்காக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இருவழி பாதைகளில் மொத்தம் 45 கி.மீ தூரத்துக்கு கடந்த 2009 ம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை கேமின் இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில், சுமார் 2,500 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு நந்தம்பாக் கம் மற்றும் அண்ணாசாலை அருகே வுள்ள சிவானந்தா சாலையில் தற்காலிக குடியிருப்புகள் அமைக் கப்பட்டுள்ளன. தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் பல்வேறு பிரிவுகளில் இந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட காலத் துக்குள் பணியை முடிக்காததால், கேமின் நிறுவனத்தை மெட்ரோ ரயில் பணியில் இருந்து வெளி யேற்ற மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதனால், மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் திடீ ரென நிறுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொட்டும் மழையையும், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. சுமார் 2,500 தொழிலாளர்கள் நேற்று தங்களின் குடியிருப்புகளிலேயே இருந்தனர்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் வேலைக்காக வந்திருந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:
‘‘பிஹார், அசாம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளை செய்துவந்தோம். குறிப்பாக கேமின் நிறுவனத்தின் கீழ் சுமார் 2,500 பேர் பணியாற்றி வருகிறோம். வழக்கமாக பணிக்கு செல்வது போல், இன்று (நேற்று) காலை 8 மணிக்கு புறப்பட்டோம். ஆனால், இன்று பணிக்கு வரவேண்டாம் என்று எங்களின் மேல் அதிகாரிகள் கூறினார்கள். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
கேமின் நிறுவனத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியேற்றி யிருப்பதாக காலை 10 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிந்தது. ஆனால், எங்கள் மேற்பார்வை யாளர்கள் இதுவரையில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தற்போது மெட்ரோ ரயில் பணியில் இருக்கிறோமா? இல்லையா? என்பது கூட தெரிய வில்லை’’ என்றனர்.
சம்பளம் வழங்கப்படவில்லை
அங்குள்ள மற்றொரு தரப் பினரிடம் கேட்ட போது, ‘‘எங்கள் கோரிக்கைகள் குறித்து இங்குள்ள தொழிலாளர் நலத்துறையிடமோ, அரசியல் கட்சிகளிடமோ கூறுவதற்கு மொழி பெரிய தடை யாக இருக்கிறது. எங்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. எங்களின் பிரச்சினை குறித்து பேச சங்கம் அமைத்து கொள்ளவும் உரிமை இல்லாத நிலையில் தான் இருக்கி றோம். இருப்பினும், இங்கு பணி இல்லை என அறிவித்துவிட்டால், சென்னையிலேயே வேறு இடத்தில் பணியாற்றவும் நாங்கள் தயாராகவுள்ளோம். நாங்கள் எங்களின் உழைப்பை நம்பியே வாழுகிறோம்’’ என்றனர்.
இது தொடர்பாக கேமின் நிறு வனத்தின் அதிகாரியிடம் கேட்ட போது, ‘‘மெட்ரோ ரயில் நிறுவனத் தில் இருந்து வெளியேற நேற்று முன்தினம் தான் அறிவிப்பை பெற்றோம். எங்கள் கீழ் உள்ள தொழி லாளர்களுக்கு எஞ்சியுள்ள சம்பளம், இதர சலுகைகளை வழங்கு வோம். எங்களின் அடுத்த கட்ட முடிவு குறித்து எங்கள் நிறு வனத்தின் மேல்மட்ட அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
எனவே, இதற்கான அறிவிப்பை நாங்கள் முறைப்படி வெளியிடுவோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT