Published : 18 Jul 2015 08:08 AM
Last Updated : 18 Jul 2015 08:08 AM

புதிய தொழிற்சாலைகளை தாமதமின்றி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: அலுவலர்களுக்கு அமைச்சர் ப.மோகன் அறிவுறுத்தல்

புதிய தொழிற்சாலைகளை தாமதமின்றி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்களுக்கு ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் அறிவுறுத்தியுள்ளார்.

தொழிலக பாதுகாப்பு மற் றும் சுகாதாரத்துறை இயக்க அலுவலர்கள் பணித் திறனாய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள இந்திய அதிகாரிகள் சங்க அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களிடம் அமைச்சர் ப.மோகன் பேசிய தாவது:

கிராமப்புறங்களில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளை ஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்ககம் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

சிவகாசியில்..

மேலும்,பட்டாசுத் தொழிற் சாலைகளில் ஏற்படும் தொடர் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், சிவகாசியில் தொழி லாளர் பயிற்சி மையம் கட்டப் பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தில் ஆய்வகமும் கட்டப்பட்டு வரு கிறது. இந்த மையத்தில் இதுவரை 20 குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நடமாடும் கண்காணிப்பு வகுப்பில் 639 தொழிலாளர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். கட்டுமானப் பணியில் அதிக தொழிலாளர்கள் ஈடுபடும்போது ஏற்படும் விபத்துகளை தடுத்திட, மாதம் இரண்டு தொழிலாளர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்திட ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு தேவை

தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது தொழி லாளர் பாதுகாப்பினை உறுதி செய்வதோடு, தூய்மை, காற் றோட்டம், கழிப்பறை பராமரிப்பு, கழிவுகள் பராமரித்தல் உள்ளிட்ட வற்றையும் கண்காணித்தல் வேண் டும். தமிழகத்தின் தொழில் வளத்தினை மேம்படுத்திடும் வகையில் உரிமம் கோரும் புதிய தொழிற்சாலைகளை தாமதமின்றி பதிவு செய்ய தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசுச் செயலாளர் குமார் ஜயந்த், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் கட்டுமானத்துறை இயக்குநர் சி.ஞானசேகர பாபுராவ், கட்டிட மற்றும் இதர கட்டுமானப் பிரிவு மூத்த கூடுதல் இயக்குநர் பி.போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x