Published : 18 Jul 2015 07:49 AM
Last Updated : 18 Jul 2015 07:49 AM

அம்மா சிமென்ட் திட்டத்தை அறிய கட்டணமில்லா தொலைபேசி வசதி

சிமென்ட் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கும் வகையில், குறைந்த விலையில் அம்மா சிமென்ட் விற்பனை திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்.

இதன் மூலம் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.190 என்ற விலையில் விற்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் ஊராட்சி அளவிலான கட்டமைப்பின் மூலம் இந்த சிமென்ட் விற்கப்படுகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த 16-ம் தேதி வரை 5.17 லட்சம் மெட்ரிக் டன் அதாவது ஒரு கோடி சிமென்ட் மூட்டைகள் விற்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 595 பேர் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டம் மூலம் 1500 சதுரஅடிக்கு உட்பட்டு வீடுகட்டுபவர்களுக்கு 750 மூட்டைகள், பழைய வீடு பழுது மற்றும் புதுப்பிக்க 10 முதல் 100 மூட்டைகளும் சிமென்ட் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை அறிந்து கொள்ள 1800-425-22000 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x