Published : 28 Mar 2014 11:15 AM
Last Updated : 28 Mar 2014 11:15 AM
மத்திய சென்னை தொகுதியில் படித்த மற்றும் நடுத்தர வாக்காளர்களைக் கவரும் வகையில் ‘கெரில்லா’ முறை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள தேமுதிக திட்டமிட்டுள்ளது.
மத்திய சென்னையில் அதிமுக வேட்பாளராக எஸ்.ஆர்.விஜயக்குமார், திமுக வேட் பாளராக தயாநிதிமாறன், தேமுதிக வேட்பாளராக பேராசிரியர் ரவீந்தரன் ஆகியோர் போட்டி யிடுகிறார்கள். படித்தவர்களின் எண்ணிக்கை இந்த தொகுதிகளில் அதிகமாக உள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பல்வேறு பிரச்சார வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றனர்.
தங்கள் தேர்தல் பிரச்சார முறை தொடர்பாக தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினரும், மத்திய சென்னை தேர்தல் பொறுப்பாளருமான கே.திலீப் குமார் கூறுகையில், “இந்த தேர்தலில் 2 வகையான தேர்தல் பிரச்சாரத்தை மேற் கொள்ளவுள்ளோம்.
ஒன்று வழக்கமாக வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொள்வது. மற்றொன்று சமூக வளைதளங்களில் மூலம் ஓட்டுசேகரிப்பது. இந்த வகையான பிரச்சாரத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மறைமுகமாக தாக்கி எங்களுக்கு வாக்குகளை சேகரிப்பதால் இதற்கு கெரில்லா தேர்தல் பிரச்சாரம் என பெயரிட்டுள்ளோம்.
மற்ற தொகுதிகளோடு ஒப்பிடுகையில் மத்திய சென்னையில் படித்தவர்கள் அதிகம், பணிக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. தெருக்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, அவர்களை வீட்டில் பார்க்க முடியாது. எனவே, வாக்காளர்களுக்கு வாக்குறுதி தரும் வகையில் ஸ்மைல் (smile) என்ற லோகோவுடன் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரத்தை வெளியிடவுள்ளோம். இதில் S - செக்குலர் (மதச்சார்பின்மை), M- மார்டன் (புதுமையான மாற்றம்), I - இன்கூலிசிவ் குரோத் (சமமான வளர்ச்சி), L - லையபிள் (நான் கடமைப்பற்றுடன் இருக்கிறேன்), E - எலிமினேட் (ஊழலை ஒழிப்பது) என உருவாக்கியுள்ளோம். இதை தேர்தல் வாக்குறுதியாக கொண்டு வரும் 1-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT