Published : 06 Jul 2015 10:06 AM
Last Updated : 06 Jul 2015 10:06 AM

கும்மிடிப்பூண்டியில் தென்னிந்திய யோகாசன போட்டி: 795 மாணவர்கள் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி அருகே தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டி நேற்று நடைபெற்றது. இதில், 795 மாணவ-மாணவிகள் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து பார்வையாளர்களை அசத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயலில், டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில் தென்னிந்திய அளவிலான 11-ம் ஆண்டு யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு யோகா விளையாட்டு மேம்பாட்டு கழகம், டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரி, கும்மிடிப்பூண்டி கைரளி யோகா வித்யா பீடம் ஆகியவை இணைந்து இப்போட்டியை நடத்தின.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 795 பள்ளி மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்றனர். வயது வாரியாக 9 பிரிவுகளாக போட்டி நடை பெற்றது. இப்போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இறுதியாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதில், ஆண்கள் பிரிவில் நெய்வேலியைச் சேர்ந்த பள்ளி மாணவன் சதீஷ் கண்ணா, பெண்கள் பிரிவில் காரைக்காலைச் சேர்ந்த பள்ளி மாணவி காயத்ரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இருவருக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

டி.ஜெ.எஸ். கல்வி குழும தலைவர் கோவிந்தராஜன், கைரளி யோகா வித்யா பீட நிறுவனர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x