Published : 10 Jul 2015 08:02 AM
Last Updated : 10 Jul 2015 08:02 AM

வியாபாரியை மிரட்டிய எஸ்ஐ கைது

செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளராக, சென்னையைச் சேர்ந்த தாம்சன் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு பணிபுரிந்தார் அப்போது, பழவேலி அருகே நெடுஞ்சாலையோரம் இரவு உணவு விடுதி நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாக, அதன் உரிமையாளர் துரைராஜிடம் ஆய்வாளர் தாம்சன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக, துரைராஜ் மற்றும் செங்கல்பட்டு நகர வர்த்தக சங்க தலைவர் சுப்ரமணி ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்ததையடுத்து, தாம்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பான வழக்கு செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், சாட்சி அளிக்கக் கூடாது என மே மாதம் 15-ம் தேதி தம்மை ஆட்களை வைத்து மிரட்டியதாக தாம்சன் மீது சுப்ரமணி புகார் அளித்துள்ளார். அதன்பேரில், செங்கல்பட்டு நகர போலீஸார் தாம்சனை கைது செய்து மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x