Published : 03 May 2014 08:22 AM
Last Updated : 03 May 2014 08:22 AM
பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களும், 10-ம் வகுப்புடன் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களும் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்துவிடலாம். இதற்கு “லேட்ரல் என்ட்ரி” என்று பெயர். 2014-15-ம் கல்வி ஆண்டில் லேட்ரல் முறையில் பாலிடெக்னிக்கில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் மே 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.150. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவசம். இதற்கு சான்றொப்பம் பெறப்பட்ட சாதிச் சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் செயற்கை உடல் உறுப்புகள் தயாரிப்பு தொடர்பான டிப்ளமா படிப்பில் முதல் ஆண்டில் சேர பிளஸ்-2 மாணவர்களும், தரமணி டாக்டர் தர்மாம்பாள் அரசு பாலிடெக்னிக்கில் அழகு சாதனம்-அலங்காரம் (காஸ்மெட்டாலஜி) டிப்ளமோ படிப்பில் முதல் ஆண்டு சேர மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகவலை அரசு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT