Published : 27 Jul 2015 09:27 AM
Last Updated : 27 Jul 2015 09:27 AM

செல்போன் மூலம் மின்சார ரயில் டிக்கெட்: தினமும் 750 பயணிகள் புதிதாக முன்பதிவு

செல்போன் மூலம் மின்சார ரயில் டிக்கெட்டை பதிவு செய்யும் வசதி பயணிகளிடம் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் 750 பயணிகள் இவ்வசதியில் புதிதாக இணைகின்றனர் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் புறநகர் பகுதி களுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினமும் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை டிக்கெட்கள் விற்கப் படுகின்றன. கவுன்டர்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், நேரத்தை சிக்கனப்படுத்தவும் செல்போன் மூலம் டிக்கெட் பெறுவதற்கான செல்போன் ஆப் சேவை கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் சென்னை எழும் பூர் - தாம்பரம் மார்க்கத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தியதால், பயணிகளிடையே பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 16-ம் தேதி இந்த சேவை சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை-திருவள்ளூர், சென்னை கடற்கரை-வேளச்சேரி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, பயணிகள் ஆர்வமாக செல்போன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “மின்சார ரயில் டிக்கெட்டுகளை பெற பயணிகள் இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை. அறிமுகப் படுத்தப்பட்டுள்ள செல்போன் சேவை மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி மக்களிடம் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது. ஆரம்பத் தில் தினமும் 500 பேர் புதியதாக பதிவு செய்வார்கள். ஆனால், தற் போது தினமும் 750 பேர் புதியதாக சேருகின்றனர். இதுவரை 72 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பதிவு செய் துள்ளனர்.

டிக்கெட் காண்பிப்பது எப்படி?

டிக்கெட் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 1 மணி நேரம் வரை பயணம் தொடங்குவதற்கான காலம் ஆகும். இந்த டிக்கெட்டை மற்றவர்களுக்கு அனுப்ப இயலாது. ஒரு முறை பதிவு செய்த பின் மாற்றம் செய்ய இயலாது.

பதிவு செய்த பிறகும் செல்போனில் இணைய தள சேவை இருக்க வேண்டும். அப்போதுதான், டிக்கெட் பரிசோதகர் வரும்போது டிக்கெட்டை எடுத்து காட்ட முடியும். அப்ளிகேஷன் உள்ளே சென்று ‘ஷோ ஆப்ஷன்’ என்ற பட்டனை அழுத்தினால் பதிவு -செய்த டிக்கெட்டை காணலாம். சீசன் டிக்கெட்டை புதுப்பிக்கும் வசதியும் இருக்கிறது.

செல்போன் மூலம் டிக்கெட் பெறுவோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க துண்டுபிரசுரங்கள் விநியோகம், ரயில் நிலையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் விளம்பர பலகைகள் வைத்து ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், செல்போன் மூலம் மின்சார ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து ரயில் நிலையங்களில் விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்துள் ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x