Published : 13 Jul 2015 10:39 AM
Last Updated : 13 Jul 2015 10:39 AM

பூனைகளை ரசித்து பாதுகாக்கும் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள்: திண்டுக்கல் அருகே பூங்கா அமைத்து பராமரிக்கும் மனிதநேயம்

அபசகுனம், ராசி இல்லாதவை என சமூகத்தால் ஒதுக்கப்படும் பூனைகளை, திண்டுக்கல் அருகே வத்தலகுண்டைச் சேர்ந்த ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள், பூனை பூங்கா அமைத்து பராமரிக்கின்றனர்.

மனிதர்களுடைய செல்லப் பிராணிகள் நாய், பூனைகளாகும். அடுப்பறையை அதிகம் சேதப் படுத்தும் எலிகளை விரட்ட, கடந்த காலங்களில் வீட்டுப் பெண்கள் பூனைகளை வளர்த்தனர். நாய் களைவிட, பூனைகள்தான் மனித ருக்கு மிக நெருக்கமாக இருந்தன.

குடும்பத்தில் முக்கியமான வர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்க முடியாது.

அதுபோல, பூனை வீடுகளில் மிகுந்த உரிமை எடுத்துப் பழகும் என்பதாலே, ‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என்ற பழமொழியே வந்தது என்பர்.

இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில், பூனையைப் பார்த்துச் சென்றாலோ, குறுக்காக அது நடந்து சென்றாலோ நினைத்த காரியம் நடக்காது என்ற மூடநம்பிக்கை மனிதர்களிடம் ஏற்பட்டுவிட்டது. அதனால், தற்போது விருப்ப விலங்குகளில் இருந்து சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட விலங்காக பூனைகள் மாறிவிட்டன. எனவே, தற்போது பூனைகளை வளர்க்க யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.

இத்தகைய பூனைகளை வத்தலகுண்டைச் சேர்ந்த ஆதரவற்ற பெண் குழந்தை கள் பூங்கா அமைத்து பராமரிக் கின்றனர்.

வத்தலகுண்டு அருகே உள்ளது பரசுராமபுரம். இங்கு விஜயலட்சுமி என்பவர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தி வந்தார். இவர் சமீபத்தில் இறந்துவிட்டதால் அவரது குடும்பத்தினர் தற்போது இதை நடத்துகின்றனர். இந்த இல்லத்தில் ஆதரவற்ற 30 பெண் குழந்தைகள் தங்கி, 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கின் றனர்.

இந்த குழந்தைகள், ஆளுக்கு ஒன்றாக, 30 பூனைகளை பராமரிக் கின்றனர்.

குழந்தைகள் ஓடியாடி விளை யாட பூங்கா இருப்பதுபோல, இந்த பூனைகள் துள்ளிக் குதித்து விளையாட பூங்கா அமைத்துள் ளனர். பிரத்தியேகமாக 2,500 சதுர அடியில் குழாய்கள், கால்வாய், சூரியக் குளியல் மற்றும் அல மாரிகள் அமைத்து, சுற்றிலும் வலைபோட்டு ஒரு பூனை பூங் காவே அமைத்துள்ளனர். இந்த பூங்காவில் பூனைகள் தூங்கி ஓய்வெடுப்பதற்கு தனித்தனி அறைகள் உள்ளன.

இந்த பூனைகளை குளிப்பாட்டி பராமரிப்பது முதல் உணவூட்டும் பணிகள் வரை அனைத்தையும் ஆதரவற்ற குழந்தைகளே மேற் கொள்கின்றனர்.

ஒவ்வொரு பூனைக்கும் ஒரு விருப்ப பெயர் (பெட் நேம்) வைத்து அழைக்கின்றனர். அந்தப் பெயரை கேட்டதும் அந்த பூங்காவில் எங்கிருந்தாலும் அந்த பூனைகள் அவர்களை நோக்கி துள்ளிக்குதித்து ஓடி வருவது அந்த குழந்தைகளிடம் இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது.

இதுகுறித்து ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி காளிமுத்து கூறியது: எந்த உயிரினமும் வெறுக்கத்தக்கது இல்லை. அவை அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்கும். அவற்றை வெறுத்து ஒதுக்காமல் அன்பு செலுத்தினால் அவை நமக்கு உற்ற தோழனாகிவிடும். இந்த அன்பில் எல்லையற்ற ஆனந்தமும் உள்ளது என்பதை குழந்தைகளிடம் ஏற்படுத்தவும், எந்த ஒரு உயிரினமும் ராசி இல்லாதவை அல்ல என்பதை புரியவைக் கவும் குழந்தைகள் மூலம் இந்த பூனைகளை வளர்க்கிறோம்.

ஓய்வு நேரத்தில் இந்த குழந் தைகள் பூனைகளிடம் நேரத்தை செலவிடும்போது அவர்களுக்கு மனஅமைதி கிடைக்கிறது. பூனை களை பராமரிப்பது எளிதல்ல. செலவு அதிகம். அதனால், பூனைகளை குடும்பக் கட்டுப்பாடு செய்து வளர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x