Last Updated : 18 Jul, 2015 10:43 AM

 

Published : 18 Jul 2015 10:43 AM
Last Updated : 18 Jul 2015 10:43 AM

6 கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புப் பணிகளில் அக்கறை: சுனாமியில் தொடங்கி, இன்றும் தொடரும் வேணு. சீனுவாசன் அறக்கட்டளையின் சேவை

பாரம்பரியம் மிக்க டிவிஎஸ் மோட் டார் நிறுவனம் நாகை மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கிராமங்களுக்காக இதுவரை ரூ.10 கோடிக்கும் மேலாக சேவைப் பணிகளை செய் துள்ளது.

அந்நிறுவன நிர்வாக இயக்கு னர் வேணு.சீனுவாசன் தோற்றுவித் துள்ள, ‘சீனுவாசன் சேவைகள் அறக்கட்டளை’ என்ற டிரஸ்ட் மூல மாக கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.85 லட்சத்துக்கான சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராம தன்னிறைவு திட்டத்தின்கீழ், கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஒன்றி யங்களில் 4 அங்கன்வாடிகள், 3 பள்ளிகள், 2 சமுதாயக் கூடங்கள், 2 சிமென்ட் சாலைகள், 2 பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் ஆகியன அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. ரூ.1,09,60,000 மதிப்பீட்டில் நிறை வேற்றப்பட உள்ள இந்த திட்டத் தில், பொதுமக்கள் பங்குத்தொகை ரூ.55,89,600 ஆகும். சில தினங்க ளுக்கு முன்பு, பொதுமக்கள் சார் பில், இந்த தொகையை நாகை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி யிடம் இந்த அறக்கட்டளை வழங்கி யுள்ளது.

இதுபற்றி சீனுவாசன் சேவைகள் அறக்கட்டளைத் தலைவர் அசோக் ஜோஷி கூறும்போது, “கடந்த 2004-ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பாதிப்பிலிருந்து மக்களை மீட்க முடிவு செய்த டிவிஎஸ் நிறுவனம், நாகை மாவட்ட கடலோரப் பகுதியில் தனது சேவையை தொடங்கியது. உடனடித் தேவையான தற்காலிக வசிப்பிடங்கள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளைச் செய் யத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை இம்மக்களைவிட்டு அகலாமல் சேவையாற்றி வருகி றோம்” என்றார்.

850 தற்காலிக முகாம்கள்

சுனாமியால் அப்போது பாதிக்கப் பட்ட மக்களுக்காக 850 தற்காலிக முகாம்கள் அமைத்து அதில் தங்கவைக்கப்பட்டிருந்த அத்தனை பேருக்கும் பல நாட்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவற்றை இந்த அறக்கட்டளையினர் வழங்கி னர். பிறகு மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியபடி, கீழமூவர்கரை மீனவ கிராமத்தில் 157 மீனவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுத் தனர்.

கீழமூவர்கரை கிராமம் அடங்கிய தென்னாம்பட்டினத்திலும், கொள் ளிடம் ஒன்றியம் புதுப்பட்டினத்திலும் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் நவீன உபகரணங்களுடன் மருத்துவ மனைகள் அமைத்து, நிரந்தர மருத்துவர்களை நியமித்து மீனவ மக்களின் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாத்து வருகிறது.

“இவைதவிர 20 மீனவ கிராமங் களுக்கு குடிநீர் வசதி, 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி, 32-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பள்ளிக் கட்டிடங்கள். 21-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி கட்டி டங்கள் என்று அடிப்படை வசதி களை மேம்படுத்துவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்.

தென்னாம்பட்டினம், பெருந் தோட்டம், புதுப்பட்டினம், தாண் டவன்குளம், வேட்டங்குடி, திரு முல்லைவாசல் ஆகிய 6 ஊராட்சி களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் அடிப்படை தேவைகளை அரசுடன் இணைந்து பூர்த்தி செய்து, முன்னு தாரண ஊராட்சிகளாக மாற்ற செயல்பட்டுக் கொண்டிருக்கி றோம்” என்கிறார் அறக்கட்டளை உதவி மேலாளர் பொன் வைத்தியநாதன்.

இந்த அறக்கட்டளையின் நோக் கத்தை நிறைவேற்ற மாவட்ட நிர் வாகமும் இவர்களோடு இணைந் துள்ளது. இதற்காக ஆட்சியர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, இந்த ஊராட் சிகளின் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த 6 ஊராட்சிகளின் தலை வர்கள், பொதுமக்கள், அறக்கட்ட ளையின் சேவை நோக்கத்தை உணர்ந்த வெளிநாட்டு நிறுவனங் கள் சிலவும் இவர்களுடன் கைகோர்த்திருக்கின்றன. அடுத் தாண்டு தமிழ்நாட்டின் முன்னுதா ரண ஊராட்சிகள், நாங்கள் சேவை யாற்றும் இந்த 6 ஊராட்சிகளாகத் தான் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சீனுவாசன் சேவைகள் அறக்கட்டளை குழுவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x