Last Updated : 15 Jul, 2015 07:55 AM

 

Published : 15 Jul 2015 07:55 AM
Last Updated : 15 Jul 2015 07:55 AM

உண்மைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் தவிக்கும் காணாமல் போன விமானியின் குடும்பத்தினர்

விமான விபத்தில் காணாமல் போன விமானி சுபாஷ் சுரேஷின் குடும்பத்தினர் ஏதாவது ஒரு அதிசயம் நடந்து அவர் வீடு திரும்பிவிட மாட்டாரா என நம்பிக்கையுடன் காத்துக்கொண் டிருக்கின்றனர்.

பிச்சாவரம் அருகே கடந்த ஜூன் 8-ம் தேதி கடலில் விழுந்து விபத்துக்குள்ளான டார்னியர் விமானத்தில் விமானியாக செயல் பட்டவர் சுபாஷ் சுரேஷ். அவர் அன்று மாலையில் தனது தாய் பத்மாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். தான் வழக்கமான ரோந்து பணிகளுக்காக செல்வ தாகவும், இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பிவிடுவதாகவும் கூறியுள் ளார். விமானப் பொறியாளராக பணியாற்றி வரும் அவரது மனைவி தீபலக்‌ஷ்மி அப்போது கத்தார் நாட்டின் தோஹா நகரில் இருந்தார். அவருக்கு ‘வாட்ஸ் ஆப்’ மூலம் கடைசியாக சில குறுஞ்செய்திகளை அனுப்பி யுள்ளார்.

சுபாஷ் விமானத்தில் இருக்கும் போது அவரை அழைத்தால் தொந்தரவாக இருக்கும் என்பதால் அவரது குடும்பத்தினர் எப்போதும் அவரை அழைப்பதில்லை. ஆனால், 10.30 மணிக்கு மேலாகியும் சுபாஷ் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரது தொலை பேசியை தொடர்பு கொண்ட னர். அது அணைத்து வைக்கப் பட்டுள்ளதாக தகவல் வந்தது.

அதே போன்று அவரது மனைவி யும், தினமும் ‘ஸ்கைப்’ மூலம் பேசும் கணவர் இன்று பேசாமல் அசதியில் தூங்கிவிட்டிருப்பாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு, அதிகாலையில் கடலோர காவல் படையை சேர்ந்தவர்கள் சுபாஷின் வீட்டுக்கு சென்று, விமானம் காணவில்லை என்ற தகவலையும் தேடும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்றும் தெரிவித்துள்ளனர். சுபாஷின் பெற் றோர்கள் இந்த தகவலை தீபலக்‌ஷ் மிக்கு பிறகு தெரி வித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது காணாமல்போன விமானத்தின் உடைந்த பாகங்களில் பெரும் பாலானவையும், எலும்புகளும், ஒரு கைக் கடிகாரமும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இதனை அடையாளம் காட்டுவதற்காக விமானிகளின் குடும்பத்தினர் பல்லாவரத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு (ஒ.டி.ஏ.) வரவழைக்கப்பட்டிருந்தனர்.

கைக்கடிகாரம்

அங்கு சென்று வீடு திரும்பிய பிறகு, சுபாஷின் தந்தை சுரேஷ் கூறும்போது, “கடலோர காவல் படையினர் கண்டெடுத்த பொருட் களை எங்களிடம் காண்பித்தனர். அதிலிருந்த கைக் கடிகாரம் என் மகனுடையது அல்ல. நான் எனது மகன் ஆசைப்பட்டபடி, அவனை படிக்க வைத்தேன். அவனது விருப்பப்படி இந்த பணியில் சேர்ந்தான். ஜூன் 8-ம் தேதி வேலைக்குச் சென்ற என் மகனுக்கு என்னவாயிற்று என்று கடலோர காவல்படையினர் தான் கூற வேண்டும். அவர்களிடம் தான் என் மகனை ஒப்படைத்திருந்தேன். அவர்கள் இதுவரை சாதக மாகவோ, பாதகமாகவோ எதுவும் கூறவில்லை. தந்தை என்ற முறையில் என் மகன் திரும்பி வருவான் என்று நான் நம்பு கிறேன். தேடும் பணிகள் நிறுத்தப் பட்டுவிட்டதாக எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்க வில்லை” என்றார்.

சென்னை நங்கநல்லூரில் தில்லை கங்கா நகரில் வசித்து வந்தவர் சுபாஷ் சுரேஷ்(30). அவர் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றுள்ளார். பிறகு, ஜலந்தரில் உள்ள ஆர்.இ.சி. பொறியியல் கல்லூரியில் இயந்தி ரவியல் பட்டம் பயின்றார். பிறகு விமானியாக ஆசைப்பட்ட சுபாஷ், அமெரிக்காவில் உள்ள பயிற்சி மையத்தில் பயின்று 2008-ம் ஆண்டில் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார்.

அவரது மனைவி தீபலக்‌ஷ்மி யும் சென்னையைச் சேர்ந்தவர். சுபாஷ்-தீபா தம்பதியினருக்கு இஷாந்த் என்ற 14 மாத ஆண் குழந்தை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x