Last Updated : 30 Jun, 2015 02:41 PM

 

Published : 30 Jun 2015 02:41 PM
Last Updated : 30 Jun 2015 02:41 PM

புதுச்சேரி சாலை விபத்தில் 3 போலீஸார் உட்பட 8 பேர் பலி

புதுச்சேரி அருகே நடந்த சாலை விபத்தில் 3 போலீஸார் உட்பட 8 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கே.கே நகரைச் சேர்ந்தவர் விஜயா. இவரது குடும்பத்தினர் 7 பேர் நேற்று இரவு 2 கார்களில் புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் சென்னைக்கு இரவு திரும்பி கொண்டு இருந்தனர்.

கிழக்கு கடற்க்கரை சாலையில் ஜெகநாதபுரம் அருகே இந்த 2 காரும் வந்த போது ஜெகநாதபுரம் மீனவ கிராமத்தில் உள்ள எறால் பண்ணை ஒன்றில் இருந்து கழிவுகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று கிழக்கு கடற்கரை சாலையில் ஏற முயன்றது.

அப்போது, சென்னை நோக்கிச் சென்ற 2 கார்களில் ஒரு கார் மீது லேசாக மோதி விபத்துக்குள்ளானதில் கார்களில் வந்தவர்கள் மினி லாரி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் சேர ஆரம்பித்தது. இத்தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸார் மற்றும் மரக்காணம் தனிப் பிரிவு ஏட்டு ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது, சென்னையிலிருந்து இருந்து மீன் ஏற்றிக் கொண்டு கேரளா சென்ற மினி கண்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது. அதி வேகத்தால் கட்டுபாட்டை இழந்த அந்த கண்டெய்னர் லாரி சாலையில் ஓரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், வேடிக்கை பார்த்த பொதுமக்கள், மற்றும் சமாதானம் செய்து கொண்டிருந்த போலீஸார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதில், மரக்காணம் தனிப் பிரிவு ஏட்டு ஆறுமுகம், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல்துறை ஜீப் ட்ரைவர் தவசீலன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் உயிருக்குப் போராடிய நிலையில் காரில் பயணம் செய்த பெண் விஜயா, கோட்டகுப்பம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா, அனுமந்தை சுங்கவரி சாவடியின் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சேகர், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையாவை ஏற்றிவந்த ஆட்டோ ஓட்டுனர் சங்கர் ஆகிய 4 பேரும் பிம்ஸ் மருத்துவமணையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயங்களுடன் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை 3.35 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி மரக்காணத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும், பாரதி நகரைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரும் உயிரிழந்தனர். அதிகாலை 4 மணி நிலவரப்படி 8 பேர் உயிரிந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x