Published : 09 Jun 2015 07:43 AM
Last Updated : 09 Jun 2015 07:43 AM

ஆர்.கே.நகர் தொகுதியில் பெற்றோரை தேர்தலில் வாக்களிக்கச் செய்வோம்: மாவட்ட ஆட்சியர் முன் பள்ளி மாணவிகள் உறுதி

ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத்தேர் தலில் பெற்றோரை கட்டாயம் வாக்களிக்கச் செய்வோம் என மாவட்ட ஆட்சியர் முன்னி லையில் பள்ளி மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கி றது. இத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது.

அதில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை கட்டாயம் பதிவு செய்வதும் ஒன்று. அந்த வகையில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதியில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர தட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தொண்டு அமைப்புகள் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவியர் மூலம் தங்கள் பெற்றோர் மற்றும் வாக்களிக்க தகுதி பெற்ற குடும்பத்தினரை கட்டாயம் வாக்களிக்கச் செய்திடுவோம் என உறுதி மொழி பத்திரம் பெறப்படுகிறது.

வீடுகள் தோறும் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்கள் வழங்குதல், கல்லுாரி மாணவ மாணவியர் மூலம் விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சிகள், வீடியோ வாகனம் குறும்படம் திரையிடுதல், கட்டாயம் வாக்களிப்போம் என பொது இடங்களில் கையெழுத்து பிரச்சாரம், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக ஆர்.கே. நகர் சட்டப் பேரவை தொகுதியில் அடங்கியுள்ள மாநக ராட்சியின் 7 வார்டுகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு முக்கிய சாலைகளான திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் எண்ணுார் நெடுஞ்சாலைகளில் விளம்பர தட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து நேற்று, பழைய வண்ணாரப் பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலரும், சென்னை மாவட்ட ஆட்சியருமான எ.சுந்தரவல்லி முன்னிலையில் பள்ளி மாணவியர், ‘தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தில் வாக்களிக்க தகுதி பெற்ற அனைவரையும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க செய்வோம்’ என உறுதி மொழி ஏற்றனர்.

பின்னர் அனைத்து மாணவிகளுக்கும் உறுதிமொழி பத்திரம் வழங்கப்பட்டது. அப்பத்திரத்தில் மாணவியர் கையொப்ப மிடுவதுடன், தங்கள் பெற்றோரிடம் கட்டாயம் வாக்களிப்போம் என உறுதி யளித்து கையொப்பம் பெற்று பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்குவர்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர்கள் ஷில்பா பிரபாகர், எஸ்.செந்தாமரை, வடக்கு மண்டல துணை கமிஷனர் எம்.லட்சுமி, கல்வி அலுவலர் ரஞ்சனி மற்றும் வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x