Published : 09 Jun 2015 08:27 AM
Last Updated : 09 Jun 2015 08:27 AM

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிக்கு 1,500 பேர் நியமனம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்காக 1500 பேர் பணியில் அமர்த்தப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்த லுக்கான பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் துறை செய்துவருகிறது. தேர்தல் செலவினம் தொடர்பான மத்திய பார்வையாளர் மஞ்ஜித் சிங், தொகுதிக்கு வந்து பணிகளை தொடங்கிவிட்டார். பொது பார்வையாளர் விரைவில் வரவுள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான பொது தேர்தல் பார்வையாளராக கேரள மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜூ நாராயண சாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில தினங்களில் வந்து பொறுப்பேற்பார்.

இந்தத் தேர்தலில் முதல்முறை யாக தபால் வாக்குப் படிவம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னத்துடன் அவரது புகைப்பட மும் இடம் பெறுகிறது. இதற்காக கறுப்பு வெள்ளை அல்லது வண்ண புகைப்படம் கோரப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தில் ‘ஸ்டாம்ப்’ அளவு கறுப்பு வெள்ளை புகைப்படம் இடம் பெறும்.

தேர்தல் பணிகளுக்காக காவல் துறையினர் தவிர்த்து 1500 பேர் நியமிக்கப்படுகின்றனர். தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் 31 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

ஆதார் இணைப்பு

ஆதார் - வாக்காளர் பட்டியல் இணைப்பு பணிகள் குறித்து சந்தீப் சக்சேனா கூறியதாவது:

தமிழகத்தில் ஆதார் விவரங்கள் பெறுதல் மற்றும் அவற்றை பதிவு செய்யும் பணிகள் முடிந்துவிட்டன. ஆதார் இணைப்புப் பணிகள் 2 வாரங்களில் முழுமையாக முடியும்.

ஆதார் விவரங்களை பொறுத்த வரை, 5.62 கோடி வாக்காளர்களில் 4.18 கோடி பேரின் ‘பயோ மெட்ரிக்’ விவரங்கள் கிடைத்துள்ளன. அவர்களில் 3.65 கோடி வாக்காளர் களுக்கு ஆதார் எண் வழங்கப் பட்டுள்ளது. ஆனால், இவர்களில் 2.70 கோடி வாக்காளர்கள் மட்டுமே அந்த விவரங்களை அளித்துள்ளனர். சிலர் கொடுக்க விரும்பவில்லை என்பது தெரி கிறது.

ஆதார் தொடர்பாக சமீபத்தில் நடந்த கூட்டத்தில் வருவாய் நிர் வாக ஆணையர், பதிவாளர் ஜென ரல், பெல் அதிகாரிகள், சமூக பாதுகாப்பு ஆணையர் பங்கேற்ற னர். அப்போது பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்ய கூடுதலாக 325 இயந்திரங்கள் கொடுக்க இருப்பதாகவும் அதன்மூலம் விரைவாக பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x