Published : 04 Jun 2015 07:47 AM
Last Updated : 04 Jun 2015 07:47 AM

மானிய விலை விற்பனை தாமதமாக தொடங்கியது: கால்நடை தீவன பற்றாக்குறை ஏற்படுமா? - காஞ்சி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் குற்றச்சாட்டு

மானிய விலை கால்நடை உலர் தீவன விற்பனையை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார். தாமதமாக விற்பனை தொடங் கியதும் தேவைக்கேற்ப தீவனம் இருப்பு இல்லாததும் தீவனப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் குற்றம் சாட்டியுள் ளனர்.

கால்நடைகளுக்கு தட்டுப் பாடின்றி தீவனம் வழங்கு வதற்காக, மானிய விலையில் உலர் வைக் கோல் தீவனம் கிலோ ரூ. 2 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4.40 லட்சம் பசு மற்றும் எருமை மாடுகள் உள்ளன. அய்யம்பேட்டை, சித்தாலப்பாக்கம், புக்கத்துறை மையங்களில் மானிய விலையில் தீவனங்கள் விற்பனை செய்யப் படுகின்றன. ஒரு பயனாளி, அதிகபட்சமாக ஐந்து மாடுகளுக்கு தேவையான தீவனத்தை மானிய விலையில் பெறலாம். இதன்படி, ஒரு வாரத்துக்கு ஒரு மாட்டுக்கு 21 கிலோ தீவனம் என்ற அடிப் படையில் மாதம் 105 கிலோ வரை தீவனங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

வெளிச்சந்தையில் ஒரு கிலோ வைக்கோல் ரூ.8 முதல் 12 வரை விற்கப்படும் நிலையில் அரசு மானிய விலையில் தீவனம் வழங்கும் திட்டத்துக்கு கால்நடை வளர்ப்போர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தீவனம் வேண்டி பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலர் தீவனம் வழங்கும் நிகழ்ச்சியை கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா சித்தாலப்பாக்கத்திலும் உத்தி ரமேரூர் எம்எல்ஏ கணேசன் அய்யம்பேட்டையிலும் நேற்று தொடங்கி வைத்தனர். வரும் சனிக்கிழமை புக்கத்துறையில் உலர்தீவன விற்பனை தொடங் குகிறது.

கடந்த ஆண்டு மாவட்டத்தில் 5 இடங்களில் உலர்தீவன மையம் அமைத்து தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது மூன்று மையங்கள் அமைத்து தலா ரூ.5 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தாமதமாக உலர்தீவனம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதால் தேவையான அளவு தீவனத்தை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யமுடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தீவனப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் கால்நடை வளரப்போர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து,கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் பன்னீர் செல்வம் கூறியதாவது: அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு, தீவனம் சுழற்சி முறையில் வழங்கப் படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று மையங்களில் தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பண்ணைகளில் வைக் கோல் தட்டுப்பாடு உள்ளதால், விவசாயிகள் மற்றும் வெளியிடங்களில், கிலோ ஒன்று ரூ. 5.40 பைசாவுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. உலர் தீவனத் துக்கு வரவேற்பு உள்ளதால், அரசு ஒதுக்கியுள்ள நிதி முழுமையாக செலவாகும் வரை விநியோகம் இருக்கும். குறைந்தபட்சம் இரண்டு மாதம் வரை மானிய விலை உலர்தீவன விற்பனை தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x