Published : 17 Jun 2015 08:49 AM
Last Updated : 17 Jun 2015 08:49 AM

நடிகர் சங்கத்தில் இருந்து குமரிமுத்துவை நீக்கம் செய்த தீர்மானத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் இருந்து குமரிமுத்துவை நீக்கம் செய்து நிறைவேற்றப் பட்ட தீர்மானத்துக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடிகர் குமரிமுத்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு குத்த கைக்கு கொடுத்ததில் முறைகேடு நடந்திருப்ப தாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும் படி சங்கத் தலைவர் மற்றும் பொதுச் செய லாளருக்கு நான் கடிதம் எழுதினேன். அதற் காக என்னிடம் விளக்கம் கேட்டு அவர்கள் நோட்டீஸ் அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி நடந்த சங்க செயற்குழுக் கூட்டத்தில் நான் விளக்கம் அளித்தேன். அப்போதே என்னை சங்கத்தில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்நோக் கத்துடன் என்னை சங்கத்தில் இருந்து நீக்கி யது தவறு. எனவே, என்னை நீக்கி நிறைவேற்றப் பட்ட தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி எஸ்.முருகானந்தம் முன்பு இவ்வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது நடிகர் குமரி முத்துவை நீக்கும் தீர்மானத்துக்கு இடைக் கால தடை விதித்த நீதிபதி, வழக்கு விசார ணையை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x