Published : 28 Jun 2015 12:55 PM
Last Updated : 28 Jun 2015 12:55 PM

ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு துளிகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் அமைதி யான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பெண்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித் தனர். வாக்குப்பதிவு துளிகள்..

# பல இடங்களில் ஒரே வளாகத்தில் 8 முதல் 12 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. புது வண்ணாரப்பேட்டை சென்னை உயர்நிலைப் பள்ளியில் அதிகபட்ச மாக 12 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

# காசிமேடு பாரதியார் குழந்தைகள் காப்பகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கே சுமார் 2,000 பேர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதுபோல பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

# தண்டையார்பேட்டை மற்றும் கொருக்குப்பேட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இது மிகவும் குறுகலான இடம் என்பதால் சாலைகளில் வாக்காளர்கள் நிற்க வேண்டியிருந்தது.

# தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெரு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 29 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வந்தனர். அவர்கள் முதலில் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டனர்.

# புது வண்ணாரப்பேட்டை சென்னை உயர்நிலைப் பள்ளியில் வாக்குச் சாவடி எண் 83-ல் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைபட்டது.

# அம்மணியம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பூத் சிலிப் வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது.

# தண்டையார்பேட்டை என்.எஸ்.கே. தெரு மாநகராட்சிப் பள்ளி வாக்குச் சாவடி எண் 1-ல் மின்சார கோளாறு காரணமாக சிறிது நேரம் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

# தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலக வாக்குச் சாவடிக்கு வந்த பவுனம்மாள் என்ற 80 வயது மூதாட்டி 2011 மற்றும் 2014 தேர்தலின்போது கொடுக்கப் பட்ட பூத் சிலிப்பை கொண்டு வந்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

# முதல்முறை வாக்காளர்களான கொருக்குப்பேட்டை எழில் நகரைச் சேர்ந்த ஜி.தீபா, வி.மீனா ஆகியோர், தேர்தலில் ஓட்டு போட்டது புதிய அனுப வத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

# கொருக்குப்பேட்டை கோபால் ரெட்டி நகர் தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் பார்வையிட்டார். வரிசையில் நின்றவர் களிடம் குறைகளை கேட்டார்.

# அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக சாமியானா பந்தல் போடப் பட்டிருந்தது. குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது. சாமியானா போதுமான அளவில் இல்லாததால் பல இடங்களில் வெயிலில் காத்திருக்க வேண்டியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x