Published : 05 Jun 2015 07:55 AM
Last Updated : 05 Jun 2015 07:55 AM
சென்னையில் மெட்ரோ ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘வைஃபை’ வசதி செய்வது தொடர் பாக ஆய்வு நடந்துவருகிறது.
சென்னையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை (24 கி.மீ.) மற்றும் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை (22 கி.மீ.) என இருவழித் தடங்களில் பணிகள் நடக்கின்றன. உயர்த்தப்பட்ட வழித்தடங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டுமானப் பணி யில் 85 சதவீதமும், நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப்பாதை கட்டுமானப் பணி களில் 80 சதவீதமும் நிறைவு பெற்றுள்ளன.
கோயம்பேடு அசோக் நகர் வரை மெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் அளித்து, தொடக்க விழாவுக்காக காத்திருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு தொடக்க விழா தேதியை தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்றவற்றுக்கு வயர்லெஸ் நெட்வொர்க் இணைப்பு கிடைக்கக்கூடிய ‘வைஃபை’ வசதியை மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் பணிகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்ட மிட்டுள்ளோம். ரயில் பயணிக ளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் நோக்கில், தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். செல்போன் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த வுள்ளோம்.
அடுத்ததாக மெட்ரோ ரயில் கள், மெட்ரோ ரயில் நிலையங் களில் ‘வைஃபை’ வசதி செய் வது தொடர்பாக தனியார் மென்பொருள் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வுகள் முடிந்த பிறகு, முதல் கட்டமாக கோயம்பேடு ஆலந்தூர் இடையே கோயம்பேடு, சிஎம்பிடி, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் களில் ‘வைஃபை’ வசதி செய்யப் படும். அதற்கான கட்டணத்தை பயணிகளிடம் எவ்வாறு பெறுவது என்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT