Published : 03 May 2014 09:44 AM
Last Updated : 03 May 2014 09:44 AM

நாடு முழுவதும் நெட்வொர்க் அமைத்து கார் திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது: கூட்டாளிகளைப் பிடிக்க போலீஸ் தீவிரம்

சேலத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த பிரபல கார் கொள்ளையன் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் நெட்வொர்க் அமைத்து கார் திருட்டில் ஈடுபட்டு பல கோடிக்கு அதிபதியாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அவரது கூட்டாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கேரளா, குமரிக்கு விரைந்துள்ளனர்.

சேலம் பள்ளப்பட்டி மற்றும் சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் சில தினங்களுக்கு முன் இரண்டு சொகுசு கார்கள் திருடு போனது. இந்த கார் கொள்ளைச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்ததில், குமரியைச் சேர்ந்த பிரபல கார் கொள்ளையன் மணிகண்டன் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீ ஸார் சூரமங்கலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டி ருந்தபோது அந்த வழியே வந்த காரை நிறுத்தினர். காருக்குள் இருந்த பிரபல கார் கொள்ளையன் மணிகண்டன் துப்பாக்கியை காட்டி போலீஸாரை மிரட்டினான். அதிர்ச்சி அடைந்த போலீஸார் கார் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, மணிகண்டன் காரில் இருந்து தப்பி ஓட முயன்றபோது பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் துப்பாக்கியால் சுட்டு அவனை பிடித்தார். மேலும், மணிகண்டன் உடன் வந்த முகமது, மூசா, அக்பர் ஆகிய மூவரையும் போலீஸார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். காலில் குண்டடிபட்ட மணிகண்டனை சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு போலீஸார் அனுமதித்தனர்.

காரில் வந்த இரண்டு பேர் போலீ zஸார் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த கண் ணன், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது. இவர்களைப் பிடிக்க தனிப் படை போலீஸார் கேரளா மற்றும் கன்னியாகுமரி விரைந்துள்ளனர்.

மணிகண்டன் பல்வேறு மாநிலங் களில் சொகுசு கார்களை திருடி உல்லாசமாக வாழ்ந்து வந்துள் ளார். இவர் மீது மும்பையில் 300 வழக்குகள் உள்ளன.

தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு ரமேஷ் என்ற போலி பெயரில் கார் திருடிய வழக்கில் மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் மீண்டும் நெட்-வொர்க் அமைத்து கார் திருட் டில் ஈடுபட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 16 சொகுசு கார்களை திருடியிருப்பது விசார ணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் திருடும் கார்களை கேரள மாநிலம் மலப்புரத்திற்கு கொண்டு சென்று விற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து திருடும் கார்களை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறைந்த விலைக்கு விற்றுள்ளார். மணிகண்டனுக்கு நாடு முழுவதும் உள்ள கார் கொள்ளையர்களுடன் தொடர்பு உண்டு. போலீஸாருக்கு பெரும் சவாலாக விளங்கிய மணிகண்டனை, சேலம் போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் பறந்து கார் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் கடந்த 25 ஆண்டுகளாக கார் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் மும்பையில் இருந்து அதிக அளவு கார்களை திருடி வந்து விற்பனை செய்துள்ளார். இதற்காக டிரைவர்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுத்துள்ளார். மும்பையில் திருடும் கார்களை டிரைவர்கள் தமிழகத்துக்கு ஓட்டி வந்து மணிகண்டன் குறிப்பிடும் நபர்களிடம் கொடுத்து வந்துள்ளனர். தமிழகத்தில் இருந்து மணிகண்டன் விமானம் மூலம் மும்பைக்கு சென்று கார்களை கொள்ளை யடித்து விட்டு மீண்டும் விமானம் மூலம் தமிழகம் திரும்பி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். கார் கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு சினிமா துணை நடிகைகளுடன் மணிகண்டன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

மணிகண்டன் கார் கொள்ளையில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் சொத்து மதிப்புக்கு அதிபராகி உள்ளார். சொந்த ஊரில் பல கோடி மதிப்பி லான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பங்களா உள்ளது. குமரியில் இரண்டு டேங்கர் லாரி உள்ளது. ஆயில் நிறுவனம் ஒப்பந்தத்திற்கு இயக்கப்படுகிறது. மேலும், பல வாகனங்களை வாடகைக்கு விட்டு மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணி கண்டன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும், நெல்லையில் ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அவருக்கு தனியாக வீடும், தாராளமாக பணமும் செலவு செய்து வந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x