Published : 30 Jun 2015 08:10 AM
Last Updated : 30 Jun 2015 08:10 AM

ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணம் பறிப்பதா?- அரசு உத்தரவுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஹெல்மெட் அணியாதவர்களின் வாகன ஆவணங்களைப் பறி முதல் செய்ய வகை செய்யும் அரசு உத்தரவுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பதிவுபெற்ற வக்கீல் குமாஸ்தா டி.கோபாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருப்பதாவது:

இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து பயணம் செய்வோரும் வரும் ஜூலை 1-ம் தேதிமுதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு உள்துறை முதன்மைச் செயலாளர் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாதவர்களின் ஆவணங்களைப் பறிமுதல் செய்வது குறித்தோ, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட் டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றோ மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 206-ல் குறிப்பிடப்படவில்லை.

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றுதான் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 129 கூறு கிறது. ஹெல்மெட் அணியாதவர் களுக்கான தண்டனை பற்றி சட்டப் பிரிவு 177 குறிப்பிடுகிறது. ஹெல்மெட் அணியாதவர்களின் ஆவணங்களைப் பறிமுதல் செய்வது குறித்து மோட்டார் வாகன சட்டப் பிரிவு எதிலும் கூறப்படவில்லை.

ஹெல்மெட் அணியாவிட்டால் விதிக்கப்படும் அபராதமும் ரூ.100-ல் இருந்து ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக 2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மோட்டார் வாகன சட்டத் திருத்தம் தொடர்பாக அரசாணை கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தன்னிச்சை யாகவும், இயற்கை நீதிக்கு எதிராகவும் உள்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிரானது. எனவே, ஜூலை 1 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள், உடன் பயணிப்பவர் ஹெல்மெட் அணியாவிட்டால், வாகன ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வகை செய்யும் அரசு உள்துறை முதன்மைச் செயலாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இன்று விசாரணை

இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x