Published : 25 Jun 2015 10:29 AM
Last Updated : 25 Jun 2015 10:29 AM

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் 4 ஆண்டுகளாக நிறுத்திவைப்பு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் கடந்த 4 ஆண்டு களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.ஓ.) ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வாகம் செய் கிறார்கள். ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் தயாரிப்பு, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது, ஆசிரியர்களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண் டர், வங்கிக்கடன், பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎப்) முன்பணம் பெறுதல் போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

கடந்த 2009-ம் ஆண்டு வரை உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள் 100 சதவீதம் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வந்தன. பி.எட். பட்டமும், துறைத்தேர்வு களில் தேர்ச்சியும் பெற்ற அரசு நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கள் பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி களாக பதவி உயர்வு பெற்றனர். இந்த நிலையில், முதல்முறையாக கடந்த 2009-ம் ஆண்டு நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமன முறை புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டது. மொத்த காலியிடங்களில் 75 சதவீத இடங்களை பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 25 சதவீத இடங்களை நேரடியாகவும் நிரப்ப முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக 2009-ம் ஆண்டு 67 பேரும், 2011-ல் 34 பேரும் நேரடியாக உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். ஆனால், 2011-ம் ஆண்டுக்கு பிறகு நேரடி உதவி தொடக்கக்கல்வி அதிகாரி நியமனம் நடைபெறவில்லை. இதனால், பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, “உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணிக்கான காலியிடங்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம்தான் தேர்வு செய்ய வேண்டும்”என்றார்.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செய லர் தண்.வசுந்தராதேவி கூறும் போது, “உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணிக்கு குறைந்த எண் ணிக்கையிலான காலியிடங்கள் வரப்பெற்றுள்ளன. அவற்றை நிரப்பு வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித் தார்.

நேரடி உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பணிக்கான காலியிடங் கள், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல் என வெவ்வேறு பாடங் களுக்கு ஒதுக்கப்படும். குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டமும், பி.எட் பட்டமும் பெற்றிருப்பவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு எஸ்சி, எஸ்டி வகுப்பி னருக்கு 40 ஆகவும், மற்ற அனைத்து வகுப்பினருக்கும் (பிசி, எம்பிசி உள்பட) 35 ஆகவும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக 2009-ம் ஆண்டு 67 பேரும், 2011-ல் 34 பேரும் நேரடியாக உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். ஆனால், 2011-ம் ஆண்டுக்கு பிறகு நேரடி உதவி தொடக்கக்கல்வி அதிகாரி நியமனம் நடைபெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x