Published : 01 Jun 2015 11:17 AM
Last Updated : 01 Jun 2015 11:17 AM

காவல்துறையினருக்கும் 8 மணி நேர பணிமுறை அவசியம்: ட்விட்டரில் ராமதாஸ் கருத்து

நீண்ட நேர பணியால் காவல்துறையினரின் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதால் காவல்துறையினருக்கும் 8 மணி நேர பணிமுறையை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ட்வீட்களை பதிவு செய்துள்ளார். அவை:

1) பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையவேண்டும்- தமிழிசை: அப்படியா சேதி... அப்புறம் அ.தி.மு.க.வுடனான உறவு?

2) ஜெயலலிதாவின் முதல்வர் பணி தொடர வேண்டும்- எடியூரப்பா: அட...இவ்வளவு நாளா எங்கிருந்தார்... இதை சொல்வாரென முன்பே எதிர்பார்த்தோம்.

3) ஜெயலலிதாவின் முதல்வர் பணி தொடர வேண்டும்- எடியூரப்பா: எல்லாம் பரப்பன அக்ரஹார சிறை பாசம் தான்.

4) கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள் இன்று திறப்பு: புதுவகுப்பில் புகும் குழந்தைகள் சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்!

5) ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்தை செயல்படுத்த என்.எல்.சி. விருப்பம்: தேவையான நிலம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

6) நீண்ட நேர பணியால் காவல்துறையினரின் உடல்நிலை பாதிப்பு: காவல்துறையினருக்கும் 8 மணி நேர பணிமுறை அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x