Published : 02 Jun 2015 07:27 AM
Last Updated : 02 Jun 2015 07:27 AM

ராட்டினத்தில் இருந்து விழுந்து பெண் பலி: 2 பேர் கைது

மெரினா கடற்கரை சாலையில் பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ராட்டினத்தில் இருந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார்.

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் முகமது(45). இவரது மனைவி பவுஷியா(42). இருவரும் மெரினா கடற்கரை சாலை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடந்துவரும் தனியார் பொருட்காட்சியை பார்ப்பதற்கு நேற்று முன்தினம் மாலையில் சென்றனர். அப்போது 'டிஸ்கோ டான்ஸர்' என்ற ராட்டினத்தில் இருவரும் ஏறினர்.

ராட்டினம் மேலும் கீழுமாக மாறிமாறி சுற்றி வந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பவுஷியா திடீரென ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்தார். ராட்டினத்தில் இருந்தவர்களும், பார்த்துக் கொண்டி ருந்த பொதுமக்களும் குரல் எழுப்ப, ராட்டினம் உடனே நிறுத்தப்பட்டது. கீழே விழுந்த பவுஷியாவுக்கு தலை உட்பட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு மயங்கிவிட்டார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் அருகே இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மெரினா போலீஸார் விசாரணை நடத்தி, பணியின்போது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்பட காரண மாக இருந்ததாகக் கூறி, ராட்டின ஆபரேட்டர்கள் மனோஜ், பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

பாதுகாப்பு இல்லை

கல்லூரி விரிவுரையாளர் கிருஷ் ணன் கூறும்போது, "தமிழகம் முழுவதும் பொருட்காட்சிகளில் வைக்கப் படும் விளையாட்டு சாதனங்கள் எதிலுமே பாதுகாப்பு விதிகள் கடைபிடிக் கப்படுவதில்லை. வெளிநாடுகளில் உள்ள ஜெயன்ட் வீல் ராட்டினத்தில் கதவுடன் கூடிய கூண்டு இருக்கும். நாம் இருக்கையில் இருந்து தவறி விழுந்தாலும் தரையில் விழாமல் கூண்டுக்குள்ளேயேதான் இருப்போம். கொஞ்சம் கவனம் தவறினாலும் பாதிப்பு நிச்சயம்.

சென்னை-பெங்களூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு பூங்காவிலும் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் விமானப் பணிப்பெண் ஒருவர் ராட்டினத்தில் இருந்து விழுந்து பலியானார். சென்னை தீவுத்திடலில் அரசு நடத்திய பொருட்காட்சியிலும் ராட்டினத்தில் இருந்து ஒரு பெண் விழுந்து படுகாயம் அடைந்தார்.

இத்தனை சம்பவங்கள் நடந்த பின்ன ரும் பொது மக்களுக்கான பாதுகாப்பு விதிகளை யாருமே கடைபிடிக்கவில்லை. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரி களும் கண்டுகொள்ளவில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x