Published : 25 Jun 2015 09:42 AM
Last Updated : 25 Jun 2015 09:42 AM

மாணவர் விடுதிகளில் சேர நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

இந்த மாவட்டத்தில் உள்ள பி.சி. மற்றும் எம்.பி.சி. மாணவ-மாணவியர் விடுதிகளில் சேர நாளைக்குள் (26-ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மற்றும் சிறுபான்மையின மாணவர்-மாணவிகள் தங்கி கல்வி பயிலும் வகையில், 19 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 17 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியர்களும், அரசு கல்லூரி விடுதியில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகள் பயிலும் மாணவர்களும் சேர தகுதி யுடையவர்களாவர். ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தை களுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் வசிக்கும் இடத்துக்கும், கல்வி நிலை யத்துக்குமான தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ. தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

விடுதிகளில் சேர தகுதியுடைய மாணவ- மாணவியர் நாளைக்குள் (26-ம் தேதி) மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x