Published : 13 Jun 2015 10:34 AM
Last Updated : 13 Jun 2015 10:34 AM
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் நடந்து வரும் 11 ரயில்வே மேம்பாலங்களில் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த நிதி ஆண்டுக்குள் முழு பணிகளும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 2,013 ரயில்வே கேட்கள் உள்ளன. இதில் 726 இடங்கள் ஆள் இல்லா ரயில்வே கேட்களாக உள்ளன. இவற்றை கடக்கும் வாகன ஓட்டி களும், பாதசாரிகளும் விபத்து களில் சிக்கி உயிரிழக்கின்றனர். தெற்கு ரயில்வே அறிவித்துள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில் கடந்த 2012-ல் 829 பேரும், 2013-ல் 710 பேரும் இறந்துள்ளனர். இதே போல், 2014-ல் 826 பேரும், 2015-ல் மே மாதம் வரையில் 329 பேரும் இறந்துள்ளனர். எனவே, இப்பிரச் னைக்கு தீர்வு காண, ரயில்வே கேட்களில், அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களில், மேம்பாலம், கீழ்பாலம் கட்ட தமிழக நெடுஞ் சாலைத்துறை திட்டமிட்டு ஆண்டு தோறும் புதிய மேம்பாலங்கள் மற்றும் கீழ் பாலங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
ரயில் விபத்துகளை குறைக்க தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆண்டுதோறும் புதிய மேம்பாலம் மற்றம் கீழ் பாலங்களை அமைக்க அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. ஆனால், மேம்பாலங்களை கட்ட வும், சாலைகளை விரிவாக்கம் செய்யவும் நிலம் கையகப்படுத்து வது என்பது மிகப் பெரிய பிரச் சினையாக இருக்கிறது. எனவே, நிலம் கையகப்படுத்திவிட்டால், திட்டமிட்டப்படி பாலங்களை கட்டி முடிக்க முடியும்.
தமிழகம் முழுவதும் தற்போது 17 இடங்களில் ரயில்வே மேம் பாலங்கள், கீழ்பாலங்களை கட்டி கொண்டு வருகிறோம். அதில், 11 இடங்களில் ரயில்வே மேம்பாலங் களின் பணி சராசரியாக 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வரும் நிதி ஆண்டுக்குள் ஒட்டுமொத்த பணிகளையும் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப் படும். வியாசர்பாடி, எலாவூர் உள் ளிட்ட ரயில்வே மேம்பாலங்கள் இதில் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT