Published : 10 Jun 2015 08:00 AM
Last Updated : 10 Jun 2015 08:00 AM
சென்னை அருகேயுள்ள அடை யாளம்பட்டு பகுதியில் உள்ள பிரதான சாலை, 7 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலையாகவே நீடிப்பதால், அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வில்லி வாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அடையாளம்பட்டு. சென்னை மாநகராட்சி பகுதியான மதுரவாயலுக்கு மிக அருகே அமைந்துள்ளதால் இப்பகுதி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், அடையாளம் பட்டு பிரதான சாலையான பாடசாலை ரோடு மட்டும் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலையாகவே நீடிக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி றார்கள்.
இதுகுறித்து, அப்பகுதி பொது மக்கள் தெரிவித்ததாவது: சென் னைக்கு வரும் பிற மாவட்ட மக்கள் கணிசமானோர், சமீபகாலமாக அடையாளம்பட்டுவில் குடி யேறுகின்றனர். கடந்த 5 ஆண்டு களுக்கு முன் 1,500 பேர் மட்டுமே வசித்து வந்த அடை யாளம்பட்டுவில், தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக் கின்றனர். இதனால், பெருமாள் கோயில் தெரு, குளக்கரை தெரு, பாடசாலை தெரு என குறைந்த எண்ணிக்கையிலான தெருக் களுடன் இருந்த அடையாளம்பட்டு, இன்று 92 தெருக்களாக பரந்து விரிந்துள்ளது.
ஆனால், அடையாளம்பட்டுவின் பிரதான சாலை மட்டும், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படவில்லை. இதனால், முக்கால் கி.மீ. நீளமுள்ள இந்த தார் சாலை உருமாறி மண் சாலை யாகவே நீடிக்கிறது. குண்டும், குழியுமாக உள்ள இந்த மண் சாலையில் செல்லும் வாகனங் கள் மூலம் பறக்கும் புழுதியால், சாலையின் இரு மருங்கிலும் உள்ள வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். சிறு மழை பெய் தாலே இந்த சாலை சிறு சிறு குளமாக மாறிவிடுகிறது.
தனியார் திருமண மண்டபங்க ளுக்கும், விழாக்களின் போதும் வரும் வாகனங்கள், தனியார் பல்கலைக்கழக வாகனங்கள் அதிகளவில் செல்வதால், இந்த சாலை நாளுக்கு நாள் மிக மோச மாகிக் கொண்டே வருகிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைப்ப தோடு, அதில் மாநகர மினி பஸ் செல்லவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, அடையாளம்பட்டு ஊராட்சி நிர்வாகத் தரப்பினர், “நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அடையாளம்பட்டு பிரதான சாலையை விரைவில் புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT