Published : 16 Jun 2015 09:54 AM
Last Updated : 16 Jun 2015 09:54 AM

ரயில் பயணிகளிடம் தொடர் கொள்ளை: ஜோலார்பேட்டை அருகே வடமாநில கொள்ளையர் கைது

ரயில் பயணிகளிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர் 7 பேரை ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணமும், 10 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த சோமநாயக் கன்பட்டி அருகே சிக்னல் காரண மாக அனைத்து ரயில்களும் அங்கு வரும்போது வேகம் குறைக் கப்படும். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் கொள்ளையர்கள் ரயிலில் ஏறி, இரவு நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் பெண் களிடம் நகைகளை அபகரித் துக்கொண்டு, ரயில் அபாய சங்கிலி பிடித்து இழுத்து தப்பிச் சென்றுவிடுகின்றனர். இந்நிலை யில், காட்பாடி அடுத்த லத்தேரி ரயில் நிலையம் அருகே நேற்று மாலை வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று அந்த வழியாக குறைவான வேகத்தில் இயக்கப்படும் ரயில்களில் ஏற முயற்சித்து வருவதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் வந்தது.

உடனே, ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் அங்கு சென்றனர். போலீஸாரைக் கண்ட அந்த கும்பல் தப்பியோட முயன்றது. உடனே, அவர்களை மடக்கிப் பிடித்த போலீஸார் அவர்களை அரக்கோணம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த அஜய், சித்தூன், கிருஷ்ணகுமார், முகேஷ்குமார், மிதுன்குமார், சுனில்குமார், தீபக்குமார் என்பதும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ரயில் பயணிகளிடம் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 8 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட 7 பேரும் திருப்பத்தூர் ஜேஎம் 2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு, வேலூர் சிறையில் அடைக் கப்பட்டனர். இதற்கிடையே, அவர் களை காவலில் எடுத்து விசாரிக்க ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x