Published : 24 Jun 2015 07:58 AM
Last Updated : 24 Jun 2015 07:58 AM

நீதிமன்றங்களை கேலிக்கூத்தாக்க கூடாது: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

நீதிமன்றங்களையும், சட்டங்களையும் யாரும் கேலிக்கூத் தாக்க கூடாது. அவ்வாறு செய்பவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே, நீதிமன்றங்களின் கண்ணியத்தைக் காப்பாற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

திருச்சியைச் சேர்ந்த எஸ். கிறிஸ்து அடைக்கல சகாய லூயிசா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது கணவர் சுந்தர் சகாயராஜ் ஆசிரியராகப் பணிபுரிந்தார். எங்களுக்கு ஒரு மகள் உள்ளார். இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தோம். எங்கள் மகள், கணவருடனேயே வசித்து வந்தார். எனது கணவர் 1.7.2014 அன்று இறந்தார். குடும்ப ஓய்வூதியம் கேட்டு நான் விண்ணப்பித்தேன். ஆனால், எங்களுக்குள் 2007-ல் விவாகரத்து ஆகிவிட்டதால் குடும்ப ஓய்வூதியம் தர முடியாது என அதிகாரிகள் மறுத்துவிட்டனர். உண்மையாக நானும் என் கணவரும் விவாகரத்து பெறவே இல்லை. எனது உண்மையான பெயர் கிறிஸ்து அடைக்கல லூயிசா ஆகும். ஆனால், கிறிஸ்து அடைக்கல லூரிசா எனக் குறிப்பிட்டு, எனக்கு தெரியாமலேயே விவாகரத்து பெற்றுள்ளனர். எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ். வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் விவாகரத்து கோரி விண்ணப்பித்து அதைப் பெற்றுள்ளார். விவாகரத்து உத்தர வில் மனுதாரர் கையெழுத் திட்டுள்ளார். உத்தரவில் தட்டச்சு தவறால் பெயர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தவறால் நீதிமன்ற உத்தரவே தவறு என்று கூற முடியாது. மனுதாரர், வாரிசு சான்றிதழில் தனது பெயர் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வாரிசு சான்றிதழை பொறுத்தவரை, அண்டை வீட்டாரிடம் வருவாய் அதிகாரிகள் விசாரித்து வழங்கப் படும் ஆவணம். வாரிசு சான்றி தழைவிட நீதிமன்ற உத்தரவு பெரிது.

மனுதாரர் நீதிமன்றத்துக்கு வேண்டுமென்றே செல்லாமல் இருந்துள்ளார். அதனால், ஒருதலைபட்சமாக விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. இதனால், மனுதாரருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த மனுவை தாக்கல் செய்ததற்காக மனுதாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும். மனுதாரர் நீதிமன்றத்தில் போலி யான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இது, நீதிமன் றத்தை அவமதிப்பதாகும். தவறான மனுவை தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கக் கூடாது. நீதிமன்றத் தையும், சட்டத்தையும் கேலிக் கூத்தாக்க கூடாது. சட்டத்தின் மேன்மையை குலைக்கக் கூடாது. நீதியை தூய்மையாகவும், தெளி வாகவும், மாசு இல்லாமலும் இருக்கச் செய்ய வேண்டும். இதில் தவறுவோரிடம் கடுமை யாக நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நீதிமன்றத்தின் கண்ணியம் காப்பாற்றப்படும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x